Friday, January 12, 2024

TAMIL TALKS - EP.10 - இன்றைக்கு தேதிக்கு ஆங்கிலம்தான் எல்லாமே என்ற நிலை பற்றிய எமது கருத்து !!




 ஒரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் பணம் நன்றாக சம்பாதிக்க முடிகிறது , இது எதனால் என்றால் ஆங்கிலம் உலகத்தின் பொதுமொழியாக வளரும் அளவுக்கு தன்னுடைய மேம்பாட்டை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய நிகர வருமானமாக அதிகமாக பணம் சம்பாதிக்கும் சர்வதேச பெரும் நிறுவனங்கள் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மிகவும் அதிகமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன , நீங்கள் மென்பொருள் தயாரிப்பு துறையைக்கக்கூட ஒரு முக்கியமான சான்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தை பயன்படுததும்போது தனியான சப்போர்ட் நமக்கு கிடைக்கிறது ஆனால் சொந்த மொழியை பயன்படுததும்போது அப்படிப்பட்ட சப்போர்ட் கிடைப்பது இல்லை. வருங்காலத்தில் நிறைய பிரயோஜனமாக இருக்கும் ஆங்கில புத்தகங்களை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வளவு ஏன் , ஒரு இன்பினிட்டி பட்ஜெட் என்றால் நிறைய இன்ஃபர்மேஷன் சேகரிக்கப்பட்ட ஒரு ஹார்ட் டிஸ்க் கூட போதுமானதாக இருக்கலாம். நம்ம வாழ்க்கையில் ஒரு பொருளை வாங்கும்போது அந்த பொருளை வாங்கியதாக அர்த்தம் ஆகாது. அந்த பொருளை நாம் வாழ்க்கையின் வாழ்நாள் முழுவதுக்கும் வாடகைக்குத்தான் எடுக்கின்றோம் ஆனால் நாம் படிக்கும் படிப்பு மட்டும்தான் எல்லா இடங்களிலும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது. இதுவே மொழியாக உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை சரியாக கற்றுக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமைய நிறைய வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒரு கூட்டத்தில் நீங்கள் மட்டுமே தனித்து இருந்து உங்களுக்காக இருக்கும் தனித்த வெற்றிப் பாதையை காப்பாற்றிக்கொள்ளலாம். இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...