Friday, January 12, 2024

TAMIL TALKS - EP.8 - பிடிக்காத விஷயங்களை செய்வது பற்றி !!





 நம்ம வாழ்க்கையில் நாம் நிறைய நேரங்களில் நமக்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டியது இருக்கும , இது என்னப்பா இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் பணமும் பொருளும் நமக்கு பிடிக்காத விஷயத்தை சந்தோஷமாக செய்வதில்தான் இருக்கிறது.  சந்தோஷமாக இருப்பது , செய்யும் விஷயங்களை சிறப்பாக செய்வது என்பது வெறும் ஒரு முறை மட்டுமே பண்ணவேண்டிய விஷயங்கள் அல்ல தினம் தினம் பண்ணவேண்டும் அப்போதுதான் மனது அந்த விஷயத்துக்கு பழக்கமாக மாறும். உன்னால இந்த விஷயத்தில் ஜெயிக்க முடியாது ! அப்படியென்று யாரேனும் சொன்னால் அந்த விஷயத்தில் எக்ஸ்ப்பெர்ட்டாக இருக்கும் ஆட்களை வைத்து அந்த விஷயங்களை ஜெயித்து காட்ட வேண்டும் , இந்த உலகம் பொருளாதார மந்த நிலையால் ஒரு ஒரு நாளும் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது , பிளாஸ்டிக் குப்பைகள் இந்த உலகத்தை நாசம் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது, மாற்றம் வரும் மாற்றம் வரும் என்றால் எப்படி வரும் ? நாம்தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும் ! தொடர்ந்து நெருப்பு மாதிரி வேலை பார்த்தால் மாற்றம் எங்கே வராமல் போய்விடுமா கண்டிப்பாக மாற்றம் வந்துதான் ஆகவேண்டும். ஒரு உதாரணத்துக்கு ஒரு தொழில் என்றால் இலாபம் , நஷ்டம் என்று இரண்டு விஷயங்களுமே கலந்ததுதான். பணம் என்ற அளவில் நஷ்டம் வந்துவிடும் என்ற பிரச்சனை எல்லா தொழில்களிலும் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை கவனித்துக்கொண்டு இருந்தால் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. உங்களுக்கு ஒரு பெரிய லட்சியம் இருந்தால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய கருத்து காலம் என்பது எப்போதுமே குறைவாக உள்ளது என்பதே ஆகும். இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள். சமீபத்திய யோசனை என்னவென்றால் நிறைய பணம் கொடுத்து பார்க்கும் காணொளிகளை உருவாக்க வேண்டும். பணத்தை கொடுத்தால்தான் காணொளிகளை பார்க்க முடியும் என்ற வகையில் காணொளிகளை மிகவும் சிறப்பாகவே உருவாக்கலாம். இந்த மாதிரியான காணொளிகள் இசை இவைகள் எல்லாமே தயாரித்தவர்களுக்கு சொந்தம் என்பதால் ராயலிட்டியில் நிறையவே சம்பாதிக்கலாம். ஒரு சில நேரங்களில் இந்த மொத்த வாழ்க்கையிலும் ஒரு வெளிவர முடியாத வலைப்பின்னலுக்குள் மாட்டிக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு இருக்கிறது. நிச்சயமாக இந்த ஸ்பேஸ் மற்றும் டைம் கடவுளால் பின்னப்பட்ட ஒரு தரமான வலைப்பின்னல் என்றே சொல்லலாம். இந்த சமூகத்தில் நிறைய கொடியவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பண்ணக்கூடிய விஷயங்களால் அடுத்தவர்கள் இரத்தம் சாப்பிடுவார்கள் இதனால் வாழ்க்கை நரகமாக இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...