Tuesday, January 23, 2024

TAMIL TALKS EP. 25 - போதுமான சக்தியை கொடுத்தால் யாராக இருந்தாலுமே ஜெயிக்க முடியும் !!

 


இங்கே இருப்பவர்கள் எப்போதுமே ஒருவருக்கு சேர வேண்டிய சக்தியை கொடுக்க வேண்டும் என்றால் என்னவோ அவ்வளவு கடினமாக மறுத்துவிடுகிறார்கள். இவர்கள் எல்லோருக்குமே நம்மால் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் நம்மை விடவும் நன்றாக இருக்க கூடாது என்று ஒரு ஈடுபாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. இது சம்மந்தமாக நான் சொல்லும் அட்வைஸ் என்னவென்றால் நீங்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதை விட சக்திகளை வளர்த்துக்கொள்ளத்தான் ஃபோகஸ் பண்ணவேண்டும். சந்தோஷமாக இருந்த நாட்கள் உங்களுக்கு வருங்காலத்தில் ஆறுதலாக இருக்கலாம் ஆனால் சக்தியை நீங்கள் அதிகப்படுத்திக்கொண்டால் உங்களால் நிறைய விஷயங்களை சாதித்துக்கொண்டே இருக்க முடியும்.  நம்ம வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்துகொண்டே இருப்பதால் நாம் சக்திகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கான்ஸேப்ட்டையே மறந்துவிடுகிறோம். இந்த மிஸ்டேக்கை தயவு செய்து பண்ண வேண்டாம். பணமாகவும் பொருளாகவும் சேர்த்து வைத்தால்தான் இந்த உலகத்தில் நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். இல்லையென்றால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டிய நாட்களை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்க நேரிடும். இதனால்தான் இந்த உலகத்தில் உங்களுடைய சக்திகளை வளர்த்துக்கொள்வது பெரிய விஷயம் என்று சொல்லுவேன். நீங்கள் சக்திவாய்ந்த மனிதராக மாறக்கூடாது என்று உங்களை தடுக்கும் நிறைய மனிதர்கள் உங்களை என்னென்ன வகையில் நஷ்டப்படுத்த முடியுமோ அந்த அந்த வகையில் நஷ்டப்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள். உங்களுக்கு எதிராக உங்களை குறைப்பதற்காக பண்ணப்பட்டால் தெரியாமல் பண்ணினாலும் வேண்டுமென்றே பண்ணினாலும் மற்றவர்கள் பண்ணிய அந்த விஷயங்கள் உங்களின் சக்தியை குறைக்க வேண்டும் என்பதைத்தான் நேரடியான நோக்கமாக கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். உங்களுடைய சக்திகளை பாதுகாக்கும் விஷயங்களில் எப்போதுமே கவனமாக இருங்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...