Friday, January 19, 2024

TAMIL TALKS EP. 17 - நமக்குள்ளே ஒரு மாற்றம் தேவை !!


 


இந்த போஸ்ட் பார்த்ததும் என்ன மாதிரியான மாற்றம் என்று எல்லோருக்குமே ஒரு கேள்வி இருக்கிறது , நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு கசப்பாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மை , இந்த உலகத்தில் உங்களை யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் மட்டும்தான் இந்த உலகத்தில் உங்களால் வெற்றியை அடைய முடியும். உங்களுக்கு பிடித்தவர்கள் என்று கொஞ்சம் பேர் இருந்தாலும் கூட அவர்களுடைய வாழ்க்கையில் உங்களை பயன்படுத்திக்கொள்ளத்தான் உங்களை பிடிக்கும் என்று சொல்வார்கள், அடிப்படையில் நீங்கள் அவர்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்கள் இருக்கும் ஒரு மெஷின். உங்களுடைய வாழ்க்கை பழுது ஆனால் உங்களை விட்டும் உங்கள் வாழ்க்கையை விட்டும் பிரிந்துவிடுவார்கள். உங்களால் அவர்களுக்கு ஒரு ப்ராடக்ட் இருக்க வேண்டும். அப்படி எந்த ப்ராடக்ட்டும் இல்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையால் அவர்களுக்கு என்ன பிரயோஜனம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். இந்த வகையான விஷயங்களில் மிக மிக முக்கியமானது பணம் சார்ந்த விஷயம். பணம் சார்ந்த விஷயங்களில் யாரையுமே நம்ப கூடாது. உங்களோடு கூடவே இருப்பார்கள் ஆனால் பணம் என்று வந்தால் உங்களுடைய வாழ்க்கையை விட்டு விலகிவிடுவார்கள். இந்த அடிப்படையில் பிளஸ் மட்டுமே ஆதரவு கொடுப்பதையும் மைனஸ் வந்துவிட்டால் ரேஜேக்ட் பண்ணுவதையும் யாருமே கடைசி வரைக்குமே மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். இந்த உலகத்தில் நம்ம வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. தொடர்ந்து ஒழுக்கமும் நற்கருத்துக்களும் நிறைந்த புத்தகங்கள், திரைப்படங்கள் , மக்கள் என்றே அவர்களுடன் வாழ்ந்துவிட்டு தங்களை போல மனதை கட்டுப்படுத்தாமல் வெளியே இருக்கும் எல்லோரையும் தவறான அபிப்ராயத்தில் பார்த்துவிட்டு தான்தான் பெரிய ஆள் என்று தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்தால் அடிப்படையில் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்த ஒருவரை தோல்வியாளராகவே கருதுகிறது என்பதை நினைவில் கொள்க. ஒரு நூலகத்தில் இருக்கும் 200000 புத்தகங்களில் சிறந்த புத்தகங்கள் என்று ஒரு 1220 புத்தகங்களை மட்டுமே தனிமைப்படுத்தி எடுத்துவிட்டு மீதம் உள்ள புத்தகங்கள் எல்லாம் வீண் என்றும் அவைகளை படிப்பது முட்டாள்தனம் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தால் அது மிகப்பெரிய தவறாகும், நல்லவிஷயங்களும் கெட்டவிஷயங்களுமே கலந்ததுதான் வாழ்க்கை. நல்ல கருத்துக்களை மட்டுமே மனதுக்குள் விதைத்து கெட்ட கருத்துக்களை மனதுக்குள் கொண்டுவராமல் இருந்தால் அதுவுமே ஒரு வகையிலான மூடத்தனம்தான். நம்முடைய வாழ்க்கையில் தணிக்கை என்பது தேவையான கருத்துக்களை மட்டுமே தெரிந்துகொண்டு தேவையற்ற கருத்துக்களை விட்டுவிட கொண்டுவந்த ஒரு கருவிதான். ஆனால் அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட புரிந்துகொள்ள முடியாமல் வறுமை , இயலாமை , காலத்தின் கொடிய செயல்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் தன்மை இவைகளை கூட சக மனிதர்களாக நாம் புரிந்துகொள்ளாமல் இருந்தால் அடிப்படையில் இன்னொருவரை குற்ற உணர்வு இல்லாமல் காயப்படுத்ததான் பார்ப்போம். எப்படியாவது மனிதத்தன்மையை மீட்டமைக்க வேண்டும். அதுவே இப்போதைய உலகத்தின் தேவை. 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...