வெள்ளி, 12 ஜனவரி, 2024

TAMIL TALKS - EP.14 - இன்னொருவருக்கு பிடித்தவராக இருக்கவேண்டும் என்பதால் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டாம் !!




 ஒரு விஷயத்தை நாம் இலவசமாக பண்ணும்பட்சத்தில் எல்லோருக்குமே நம்மை பிடிக்கும். இங்கே அதே விஷயத்துக்காக் நாம் கொஞ்சமாக சிறிய தொகையை கேட்டால் நம்மை யாருக்குமே பிடிக்காமல் போய்விடும். இருந்தாலும் எல்லோருமே தயவு செய்து ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய கரியரை மேம்படுத்த உங்களுக்கு போதுமான பணம் தேவை , உங்களிடம் படிப்பு இருக்கிறது அது எதுக்காக இலவசமாக பயன்படுத்தப்பட வேண்டும் ? இலவசமாக பயன்படுத்தப்பட்டால் அதனால் என்ன பிரயோஜனம் ?பகுதி நேர பணமாக சேர்த்து அந்த பணத்தை வைத்து படிக்கும் மாணவர்களுமே நமது இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களுடைய கஷ்டமாக இருக்கும் வாழ்க்கையை பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா ? இங்கே நீங்கள் அடுத்தடுத்த திட்டங்களை எழுதி கவனமாக பயன்படுத்த வேண்டும்.  இலவசம் இலவசமாக பண்ணிக்கொண்டு இருந்தால் எப்போதுதான் முன்னேற்றம் அடைவது ? நம்முடைய முன்னேற்றம் இந்த வலைப்பூவில் கிட்டத்தட்ட 1000 முறை சொல்லியிருப்பது போல "பொருட்கள்" , பொருட்கள் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சார்ந்ததாக இருக்கிறது. இன்னொவேஷன் மேல் நம்பிக்கை இல்லையா ? நாம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் இன்னுமே இன்னொவேஷன்னாக இன்னுமே இம்ப்ரூவ்மென்ட்டுடன் செய்ய வேண்டும் என்று நம்முடைய மனதுக்குள் படுகிறது. அடிப்படையில் ஒரு விஷயத்துக்கு எப்போதுமே ஒரு காலாவதி தேதி இருக்கத்தான் செய்கிறது. ஒரு ஒரு விஷயமும் சரியான காலத்தில் கண்டிப்பாக ஒரு அப்கிரேடு கொடுத்தே ஆகவேண்டும் , சேதம் அடைந்த விஷயத்தை சரிபண்ணுவதை விட அந்த விஷயத்தை அதனை விடவும் சிறப்பான ஒரு விஷயத்தால் மாற்றியமைக்க முடியும் என்றால் அதுவே மிகவும் அருமையான விஷயம்தானே ?  ஒரு சில நேரங்களில் நம்ம வாழ்க்கையில் ஃபைவ் ஸ்டார் விளம்பரம் போல எதுவுமே பண்ணாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நாம் ஏதாவது பண்ணுவோம் ஆனால் நாம் என்ன பண்ணினாலும் நமக்கே எதிராக மாற்றிவிட ஒரு சில பேர் இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் இந்த உலகத்தில் எல்லோருமே அவர்களுக்கு அடிமையாக பூச்சி புழு போல வாழவேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களால் அவர்களுடைய வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. ஈகோ மட்டுமே வாழ்க்கையில் வந்து தான்தான் எல்லாமே என்று ஒரு மமதை வந்துவிட்டால் வெளியே பார்ப்பதற்க்கு சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் உள்ளுக்குள்ளே உங்களால் சந்தோஷப்படவே முடியாது. 

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...