Friday, January 5, 2024

CINEMA TALKS - SAAMY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!






 கிராமத்தில் பிறந்து நேர்மையான காவல் துறை அதிகாரியாக உருவாகவேண்டும் என்று ஆசைப்படும் கதாநாயகர் அவருடைய வாழ்க்கையில் என்னதான் காவல் துறை வேலையில் இருந்தாலும் பணபலமும் கூலிப்படையின் அதிக்கமும் கொண்ட அரசியல்லில் இருக்கும் கொடிய மனிதர்களின் உள்ளங்கையில் தான் அதிகாரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு இந்த கொடூரமான அமைப்பை சட்டப்படி உடைக்க வேண்டும் என்றும் தவறுகள் செய்தவர்களுக்கு தண்டனைகள் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் வேறு ஒரு புதிய பாதையில் போராடுகிறார். அவர் சந்திக்கும் பிரசனனைகள் என்ன ? என்பதை காதல், ஃபேமிலி பின்னணியில் ஆக்ஷன் படமாக சொல்லியிருக்கும் படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படம் வெளிவந்த காலம் 2000 - 2010 - இந்த காலகட்டத்தில் நம்ம ஊரில் ரௌடியிஸம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருந்தது. இந்த மாதிரியான காலகட்டத்தில் படங்கள் பெரும்பாலும் நம்ம ஊரில் தவறு நடப்பதை தட்டி கேட்க சமூகத்தில் அதிகாரத்தை எடுத்துக்கொள்பவர்களை நன்றாக பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் கமேர்ஷியல் படங்களாக மட்டுமே இருந்ததால் இந்த 2003 ல் வெளிவந்த திரைப்படம் இந்த ஃபார்முலாவில் இருந்து மிஸ் ஆகவில்லை. இசை மற்றும் பாடல்கள் இந்த படத்தில் பிரமாதம். விவேக் அவர்களின் நுணுக்கமான சமுதாய ஏற்ற இறக்கங்களுக்கான கருத்தை சொல்லும் காமெடி வசனங்கள் வேற லெவல்லில் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் சூப்பர் ஹிட்  ! இந்த படத்தின் அடுத்த பாகம்தான் வகையாக சோதப்பிவிட்டது !! 

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...