நம்ம ஊரில் சைக்காலஜிக்கல் காமேடி என்பது அவ்வளவாக எக்ஸ்பிளைன் பண்ணப்படாத ஒரு ஜேனர். மனிதர்களுடைய மனது எப்படி ஒரு முடிவை எடுக்கிறது அந்த முடிவுகள் எப்படி வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவருகிறது என்பதை இந்த படம் போல மாறுபட்ட கான்செப்ட்டில் யோசித்து பண்ணிய படம் என்று நம்முடைய சினிமாவில் கொஞ்சம் படங்கள்தான் உள்ளது. கமல் ஹாசன் அவர்களுடைய இயக்கம் என்றால் யாருமே எதிர்பார்க்காத கதையின் திரைக்கதையை படத்தில் பார்க்கலாம். குறிப்பாக இந்த படத்தில் கேரக்டர் டிசைன் என்று இருக்கட்டும் லோ கீ லெவல் காமிக் அப்ரோச் என்று இருக்கட்டும் எல்லாமே நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. புரொடக்ஷன் வெல்யு ரொம்ப அதிகமாக இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நிறைய ஸ்டண்ட் காட்சிகள் என்று இருப்பதால் டிஜிட்டல் கேமராவில் மொத்த படமும் படமாக்கப்பட்டு இருக்கிறது என்பதாலும் படம் அந்த காலத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த படமாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் கொஞ்சம் டிஸப்பாய்ண்ட்மைன்ட்தான். எந்த அனுபவமும் இல்லாமல் அமேட்ச்யூர் லெவல் பிளான் போட்டு ஒரு சின்ன பையன் கடத்தி பணம் பறித்து ஒரே நாளில் பணக்காரனாக ஆசைப்பட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு சிறிய குழு வேலை பார்க்க சம்பந்தம் இல்லாமல் எங்கேயோ ஸ்டண்ட் செய்துகொண்டு இருக்கும் நமது கதாநாயகர் இந்த குழுவில் சேர்க்கப்படுகிறார். ஆனால் அவர்கள் நினைத்தது போல நடக்காமல் ஒரு செயல் என்று இல்லாமல் ஒரு ஒரு செயலும் சொதப்பல் என்றே முடிந்துவிட கடைசியில் எல்லோருக்கும் என்னதான் ஆகிறது என்பதை திரைக்கதையில் நகைச்சுவை கலந்து நகர்த்தி இருக்கிறார்கள். இரு வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒரு சில விஷயங்கள் அந்த புது ஜெனரேஷன் சினிமாவாக நம்ம இந்திய சினிமா மாற்றங்களை அடைந்துகொண்டு இருக்கும் காலத்தின் நோஸ்டல்ஜிக் உணர்வுகளை நமக்கு கொடுத்துவிடுகிறது.
No comments:
Post a Comment