Tuesday, January 2, 2024

SIMPLE TALKS - நீங்கள் சப்போர்ட் பண்ணும் அந்த பெர்ஸன் !

 


நான் இந்த கருத்தை முன்னதாகவே மென்ஷன் பண்ணி இருக்கிறேன். ஒரு அம்பு அதனுடைய இலக்கை அடைய அதுக்கு தேவையான விஷயம் 1. ஆக்ஸெலரேஸன் 2. அக்யுரஸி 3. டெஸ்டினேஷன். இந்த உலகத்தில் வெற்றியை அடைய எப்போதுமே விலை கொடுத்தாக வேண்டும். விலை கொடுக்காமல் வெற்றி கிடைக்காது. ஒரு சில நேரங்களில் நம்ம வாழ்க்கை மொத்தமே கொடுத்தாலும் கூட வெற்றியை அடைய முடியாமல் போய்விடும். நிச்சயமாக நாம் கொடுக்க வேண்டிய விலை அதிகம்தான். ஆனால் , மூலைக்காரராக செயல்பட்டு வெற்றியை அடைய முடிந்த வரைக்கும் எவ்வளவு கொஞ்சமாக கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து இருக்கும் விஷயங்களை நமக்காக சேகரிக்க வேண்டும். நாம் சாகும்போது வெற்றி நம்முடன் வருவது இல்லை. நாம் சேகரித்த பொருட்கள் மட்டும்தான் நம்மோடு பயணிக்கிறது. இங்கே என்னுடைய கருத்து என்னவென்றால் வெற்றிக்காக காத்திருப்பது ஒரு சோம்பேறித்தனம். உங்களுக்கு நிஜமாகவே வெற்றி வேண்டும் என்றால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ஒரு தொழிற்சாலை தொழிலாளர் போல கஷ்டப்பட்டு வேலை செய்துதான் ஆகவேண்டும். நான் வாழ்க்கையில் எந்த ஒரு நொடியிலும் பின்வாங்கியது இல்லை. நான் சப்போர்ட் பண்ணும் பெர்ஸனுக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் எத்தனை நரகங்களை வேண்டும்என்றாலும் அனுபவிப்பேன். நான் சப்போர்ட் பண்ணும் பெர்ஸனின் பாதுகாப்பு எனக்கு அவ்வளவு முக்கியமானது.  நம்ம வாழ்க்கை என்பது வெறும் நல்லவர்கள் மட்டுமே வாழும் உலகத்தை கொண்டது இல்லை. இந்த உலகத்தில் நிறைய கெட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுத்து சப்போர்ட் பண்ணும் அந்த பெர்ஸனை காப்பாற்ற வேண்டும் அதே சமயத்தில் நம்முடைய வாழ்க்கையின் நேரான அம்பாக நம்முடைய கேரியரையும் பார்த்து முன்னேற வேண்டும். வருங்காலத்தில் நிலைக்கப்போவது இந்த டெக்ஸ்ட்டா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக பொருட்கள் மட்டும்தான் உங்களோடு இருக்கும். நிறைய நேரங்களில் நான் வணிகம் பண்ணப்போகிறேன் என்று சொன்னபோது என்னை தவிர என்னிடம் யாருமே நம்பிக்கை வைக்கவில்லை. இருந்தாலும் இந்த நொடி வரைக்கும் என்னை சப்போர்ட் பண்ணும் அந்த பெர்ஸனை நான் நம்புகிறேன். வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் நான் கண்டிப்பாக போராடுவேன். இந்த உலகத்தில் நான் தனியாக இல்லை என்பதை நான் கண்டிப்பாக நம்புகிறேன். இந்த நம்பிக்கை எனக்குள் பல வருடமாக இருக்கிறது. சரியாக சொல்லப்போனால் 2015-2024 என்று இத்தனை வருடங்களாக நம்பிக்கை இருக்கிறது. வணிகத்தில் சாதிக்க முடியும் என்றும் சப்போர்டிங் பெர்ஸன் கடைசிவரைக்கும் என்னோடு இருப்பார்கள் என்றும் என்னுடைய நம்பிக்கைகள் எல்லாம் கடைசியில் பொய் என்று ஆனால் என்னை யாராலுமே காப்பாற்ற முடியாமல் போனால் கடைசியில் என்னை விட கஷ்டப்பட்டு தோற்றுப்போனவர்கள் என்று யாருமே இல்லை. நிறைய நேரங்களில் உண்மையான காதல் , வெறும் உண்மையை மட்டுமே பேசக்கூடிய காதல் கண்ணடியால் செய்த பொருளை போன்றது , சின்ன விஷயத்தை கூட தாங்காது. இப்படிப்பட்ட காதல் நடைமுறையில் நிறைய பிரச்சனைகளை கொண்டுவரும், ஒரு விஷயத்தை நாம் செய்ய முயற்சிக்கும்போது தொடக்கத்திலேயே நமது தலைவர் தடுத்துவிடுகிறார் , நம்ம வாழ்க்கையில் நாம் எதுவுமே பண்ண முடியாதுன்னு அடைபட்டு ஒரு சிறையின் கைதியை போல வாழும் வாழ்க்கை எப்படி வாழ்க்கையாக அமையும் , இந்த காலத்தின் தடுப்பு , இந்த காலத்துடைய தடுப்பை பற்றி மட்டும்தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த விஷயத்தை கையில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டும்தான் தடுக்க முடியும். பொருட்கள் இல்லாமல் இந்த விஷயத்தை தடுக்க நாம் பண்ணும் அத்தனை முயற்சிகளுமே வேஸ்ட் என்றுதான் போகிறது. இது எல்லாமே காலத்தாலும் நம்ம தலைவராலும் இன்ஸ்டண்ட்டாக இண்டென்ஷனலாக உருவாக்கப்படும் தோல்விகள் ! இப்படிப்பட்ட தோல்விகளில் கூட காதல் தோற்றுப்போக கூடாது அதுதான் கடினமான விஷயம். 

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...