Tuesday, January 2, 2024

SIMPLE TALKS - நாட்குறிப்பு எவ்வளவு முக்கியமானது ? - ஒரு அலசல் !!

 


ஒரு நாள் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் ? உங்களுடைய வாழ்க்கையில் நாட்குறிப்பு ரொம்ப முக்கியமானது. நாட்குறிப்பு புத்தகம் அடிப்படையில் உங்களுடைய வாழ்க்கைக்காக இருக்கும் ஒரு பயனுள்ள ரெகார்ட்ஸ் இருக்கும் புத்தகம் இந்த வகையில் நீங்கள் சேமிக்கும் ரெகார்ட்ஸ் பிற்காலத்தில் உங்களுக்கு பயன்படும். இந்த உலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கணக்கு இல்லாமல் வளர்ந்துவிட்டது. வருங்கால பிரச்சனைகளை சமாளிக்க நம்முடைய மூளையின் 100 சதவீதம் பயன்படுத்தினாலும் போதாது. நம்ம மூளை என்னைக்குமே ஒரு ஹார்ட் டிஸ்க் போல செயல்படாது, நிறைய நினைவுகளை நம்முடைய மூளை அழித்துவிடும் அந்த வகையில்தான் நம்முடைய நாட்குறிப்பு நமக்கு கைகொடுக்கும்.  நாட்குறிப்பு எவ்வளவு முக்கியமானது என்றால் வணிகம் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போதும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக சிறிய கையெழுத்து மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாய்ஸ். நம்ம வாழ்க்கையில் நம்முடைய மையப்பகுதி , அதாவது CORE ஆன பகுதிகளில் எல்லாம் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்றால் நாட்குறிப்பு எவ்வளவோ பிரயோஜனமாக இருக்கும். இன்றைக்கு யாராவது சாகப்போகிறார்கள் என்றால் அதனை நம்மால் தடுக்க முடியுமா ? நம்ம வாழ்க்கை எப்போதுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. ஆனால் நாட்குறிப்பு போன்ற விஷயங்கள் வாழ்க்கை மேல் ஒரு நல்ல கட்டுப்பாட்டை கொண்டுவரும். ஒரு ஒரு நாளும் நடக்கும் விஷயங்களை பதிவு பண்ணுவது உங்களுக்கு அவ்வளவு நன்மையான விஷயம் !! கண்டிப்பாக ஒரு முறை நாட்குறிப்பு வாங்குங்கள் !

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...