Tuesday, January 2, 2024

GENERAL TALKS - 03012024003 - இங்கே எதனால் நம்ம மியூசிக் ஒரு படி மேலே இருக்கிறது ?

 


ஒரு பெரிய பட்ஜெட் ஹெட்ஃபோன் வாங்கினதும் நம்ம கதாநாயகர் ஒரு இங்கிலீஷ் பாடல் அல்லது கொரியன் பாடலை முணுமுணுத்து விடிய விடிய (விடிய விடிய) அந்த மேலை நாட்டு பாடலை கேட்டுக்கொண்டே தூங்கினாலும் நம்ம தமிழ் பாட்டு வசீகரா , முதல் கனவே , புது வெள்ளை மழை மற்றும் இன்னும் பல தமிழ் பாடல்களை கேட்டால்தான் நன்றாக இருக்கிறது ? எதனால் ? அடிப்படையில் நம்ம பாடல்களுக்கு எந்த ஒரு மியூசிக் நிபந்தனைகளும் கட்டுப்படுகளுமே கிடையாது. அதே போல வார்த்தைகளில் சின்ன சின்ன வார்த்தைகளை கூட உச்சரிக்கும்போது வேற மாதிரி மேலே இறக்கி ஏற்றி எப்படி வேண்டும்என்றாலும் உச்சரித்து பாடலாம். நம்ம பாடல்கள் எந்த நிபந்தனைகளுமே இல்லை. இசைக்காக இந்த கருவிகளை மட்டும்தான் பயன்பாடு பண்ணவேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. இது இன்னும் தெளிவாக சொல்லப்போனால் லவ் மேரேஜ்க்கும் அரேஞ்ச் மேரேஜ்க்கும் இருக்கும வித்தியாசம்தான் லோக்கல் ஸாங்க்ஸ் மற்றும் ஃபாரின் ஸாங்க்ஸ்க்குமே இருக்கும் வித்தியாசம். நம்ம கலாச்சாரத்துக்கு லோக்கல் ஸாங்க்ஸ்தான் பெஸ்ட். என்னதான் காட் ஃபாதர் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்று இருந்தாலும் நம்ம ஊரு மாஸ்டர்பிஸ் அந்நியன் படத்தை விடவா சரி என்றும் தவறு என்றும் பிரித்து காட்டி சொல்லி இருக்கிறது. இங்கே நம்ம பாடல்கள் மற்றும் இசையில் நிறைய விதிமுறைகளை நாம் கொண்டுவந்து இருப்போம் ஆனால் நமக்கு நாமே போட்டி என்று அந்த விதிமுறைகளை கடந்து வென்றுமே காட்டி இருப்போம். இருந்தாலும் மேலை நாட்டு உணவு மோகத்தில் சத்துக்கள் இல்லாத சக்கை மற்றும் மாவுகளை சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல மேலை நாட்டின் இசை மேலானது என்ற மமதையை விட்டுவிட்டு நம்ம ஊரு இசைக்கு அன்பு காட்டுங்கள். நடிக்கலாம் , ஆனால் கடைசி வரைக்குமே நடித்துக்கொண்டே இருக்க முடியாது !!

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...