Tuesday, January 2, 2024

GENERAL TALKS - 02012023002 - கண்டெண்ட் கிலாரிட்டி !! - இன்னும் பயிற்சி தேவையோ ! ஒரு அலசல் !!

 


நான் AI தேடுதல்களை வைத்து நம்ம வலைப்பூவில் நிறைய கண்டெண்ட்கள் கொடுப்பது பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பத்தில் இந்த கருத்துக்கு எதிராக இருந்தது நான்தான், இப்போது காரணம் என்ன ? தொழில் முறை போட்டி அதிகமாக மாறிவிட்டது. ஒரு சராசரியான பெர்ஸன் ஒரு நிமிஷத்துக்கு 20 வார்த்தைகள்தான் எழுத முடியும் !! வருஷத்துக்கு 30 லட்சம் வார்த்தைகள்தான் எழுத முடியும். நிறைய பணம் சம்பாதிக்கணும். இந்த உடைந்து போன டப்பா லேப்டாப்பை விட்டுவிட்டு கெட்டியான லேப்டாப் வாங்க வேண்டும். ஃபோன் , இன்டர்நெட் கனெக்ஷன், இது எல்லாமே போக குடும்பத்தை நடத்த வேண்டும். செலவுகள் இருக்கிறது. ஹாஸ்பிடல் செலவு என்றால் அதுக்குமே பார்க்க வேண்டும். இது போல நிறைய விஷயங்கள் இருக்கிறது. இங்கே என்னுடைய வலைப்பூவில் இதுவரைக்கும் எழுதிய விஷயங்களில் கண்டெண்ட் தரம் ரொம்பவுமே குறைந்ததாக நான் உணர்கிறேன். இனிமேல் ரோபோட்களோடு கைகோர்த்து வெட்கம் மானம் சூடு சுரனை எதுவுமே இல்லாமல் தரமான கன்டேன்ட் உருவாக்கி நேரத்தை மிச்சப்படுத்தி வேலையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கே என்னுடைய தனிப்பட்ட கருத்தும் நான் எல்லோருக்குமே அட்வைஸ் பண்ணுவதும் ஒரு விஷயம்தான். இந்த காலத்தில் கெட்டவனாக மட்டும்தான் இருக்க வேண்டும். நல்லவராக இருந்தால் நானே உங்களை எதிர்ப்பேன். என்னை கேட்க கூடாது. காலம் உங்களையும் என்னையும் நிச்சயமாக கட்டாயப்படுத்தி அடித்துக்கொள்ளத்தான் வைக்கும். நானும் உங்களை மன்னிக்கப்போவது இல்லை. நீங்களுமே என்னை மன்னிக்கப்போவது இல்லை. நான் கடந்த காலம் முழுக்க நல்லவனாக இருந்து என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து ஒரு அட்வைஸ் சொல்லுகிறேன். கொடியவனாக இருங்கள். சிஸ்டம்தான் நல்லவர்களை சோதிக்கிறது. கொடியோருக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கிறது, இங்கே சிஸ்டம் மாறும் வரைக்கும் கொடியோராக மட்டுமே இருங்கள். குற்ற உணர்வு வேண்டாம் !! இந்த வலைப்பூவுக்கு தரமான கண்டெண்ட் வேண்டும். போட்டியில் இருப்பவர்கள் தொழில்நுட்ப அப்கிரேட் பன்னும்போது நான் மட்டும் வெறும் கைகளை வைத்து சண்டைபோடவேண்டும் என்று முட்டாள் போல முடிவு எடுக்க கூடாது. தொழில்நுட்பத்தை தொழில்நுட்பத்தால் மட்டும்தான் தாக்க முடியும். 

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...