Tuesday, January 2, 2024

SIMPLE TALKS - ரேலேஷியன்ஷிப் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கான்செப்ட்

 


ஒரு ரேலேஷியன்ஷிப் நம்ம வாழ்க்கை முழுக்கவுமே தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று நினைப்பது ஆல்மோஸ்ட் நிறைய பேருடைய அடிப்படையான கனவாக இருக்கிறது. நமக்கு என்று ஒரு ரேலேஷியன்ஷிப் இருக்க வேண்டும். எப்போதுமே நம்முடைய வாழ்க்கையில் சப்போர்ட் பண்ணும் மனிதர்கள் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் SOUL MATES என்பது போல உயிரோடு உயிராக இணைந்து செயல்படவேண்டும் என்று நினைப்பார்கள். அடிப்படையில் பிரச்சனை எங்கே நடக்கும் என்றால் ஒரு ரேலேஷியன்ஷிப் என்பது தொழில் முறை ரேலேஷியன்ஷிப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பதால்தான். உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு சாப்பாடு பிடிக்காமல் போகலாம். அந்த குறிப்பிட்ட சாப்பாட்டை வாயில் வைத்தாலே விழுங்க முடியாது என்று ஒரு மனப்பான்மை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ரேலேஷியன்ஷிப் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம். இங்கே இரண்டு வகையாக பிரிக்கலாம் 1. ஜெனெரல் ரிலேஷியன்ஷிப் , 2. பெர்ஸனல் ரேலேஷியன்ஷிப் . பொதுவாக நண்பர்கள் , உறவுகள் , தேர்ந்தவர்கள் , தொழில்முறை மனிதர்கள் எல்லோருமே ஜெனேரல் ரேலேஷியன்ஷிப் என்ற கட்டத்துக்குள் வருவார்கள். இவர்களை தப்பி தவறி கூட பெர்ஸனல் ரேலேஷியன்ஷிப்புக்குள் கொண்டுவந்துவிட கூடாது. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு பிடிக்காத உங்களால் சகித்துக்கொள்ள முடியாத நிறைய கசப்புகளை உங்களுக்கு கொடுப்பார்கள். இப்போது பெர்ஸனல் ரேலேஷியன்ஷிப் பெற்றவர்கள் , வாழ்க்கைத்துணை , குழந்தைகள் , உடன்பிறப்புகள் எல்லோருமே பெர்ஸனல் ரேலேஷியன்ஷிப் கட்டத்தில் இருப்பார்கள். இவர்களில் பெற்றவர்கள் , உடன்பிறப்புகள் மற்றும் குழந்தைகளை கூட விட்டுவிடலாம் ஆனால் வாழ்க்கைத்துணையாக இருக்கும் லைப் பார்ட்னரை மட்டுமே கண்டிப்பாக ஜெனேரல் ரேலேஷியன்ஷிப்பில் போடமுடியாது. இவர்களிடம் நீங்கள் பெர்ஸனலாக இருக்கலாம். உங்களுடைய விஷயங்களுக்கு என்று நல்ல ஈடுபாடு இப்படி நெருக்கமான பெர்ஸனல் ரேலேஷியன்ஷிப்களில் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். கடைசியாக சொல்லவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போவது இல்லை என்பது நீங்கள் தனியாக கடைசிவரை வாழ்ந்தால் மட்டும்தான் சாத்தியப்படுமே தவிர்த்து ஒரு ரேலேஷியன்ஷிப் என்றால் உங்களையும் உங்களுடைய சுற்றுப்புறத்தையும் கண்டிப்பாக மாற்றிக்கொண்டே இருந்தால்தான் நடக்கும். SOUL MATE என்பது ஒரு அதிசயமான விஷயம். நம்முடைய வாழ்நாள் முழுவதும் வாழ ஒரு ஹோட்டல் அறை கிடைப்பது போல உங்களுக்கான SOUL MATE கிடைத்தால் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இங்கே எல்லோருமே ஹோட்டல்லில்தான் வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஆசைப்பட கூடாது. உங்களுடைய தேவை ஒரு இல்லம் எனும்போது அப்படிப்பட்ட ஒரு இல்லம் கிடைத்தவுடன் அங்கே சந்தோஷத்தை உருவாக்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்வது உங்களுடைய கைகளில் மட்டும்தான் உள்ளது. 

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...