Tuesday, January 2, 2024

CINEMA TALKS - EDHIR NEECHAL - TAMIL REVIEW - திரை விமர்சனம்


கதை என்ற அடிப்படையில் சம்திங் சம்திங் படத்துடைய சாயல் கொஞ்சம் இருக்கிறது. காரணம் என்னவென்றால் ஒரு படத்துடைய ஸ்டண்டர்ட்டான திரைக்கதையை 2 பாகம் அல்லது 3 பாகமாக பிரித்து இருக்கலாம். இந்த மாதிரியாக இரண்டு பாகமாக பிரிக்கப்பட்ட இந்த படத்தை கண்டிப்பாக ஃபர்ஸ்ட் பாகம் அல்லது செகண்ட் பாகம் என்று மிகவும் எளிமையாக தனித்தனியாக பிரிக்கலாம். தன்னுடைய பெயராக இருக்கும் குஞ்சிதபாதம் என்ற கடவுள் பெயரால் சின்ன வயதில் இருந்து நடைமுறை வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்து வரும் கதாநாயகர் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து அவருடைய பெயரை ஹரீஷ் என்று மாற்றிககொள்கிறார். இப்போது பெயரை மாற்றம் செய்தவுடன் ஒரு அதிர்ஷ்டம் போல வாழ்க்கையில் ஆசைப்பட்ட காதல் , சந்தோஷம் , நல்ல புதிய வாழ்க்கை என்று எல்லாமே கிடைத்தாலும் கடந்த காலத்தில் இருந்து சில பிரச்சனைகள் மறுபடியும் வாழ்க்கையில் தொந்தரவாக இருக்கவே இந்த பிரச்சனையை துரிதமாக முடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் ஹரீஷ் ஒரு பெரிய மாரத்தான் போட்டியை வெற்றி அடைந்து சென்னை முழுதும் இருக்கும் மக்களால் ஹரீஷ் என்ற வெற்றியாளராக அறியப்பட்டால் வாழ்க்கையில் அவருடைய பழைய பெயரின் தடங்கள் மறைந்துவிடும் என்று முடிவு எடுக்கும் ஹரீஷ் அடுத்து என்ன செய்கிறார் , அந்த மாரத்தான் ரேஸ் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. அனிருத் இந்த படத்துக்கு இசை அமைத்து இருப்பதால் பாடல்கள் ஹிட் என்று ஆகிவிட படம் வெளிவந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாதி படம் ரொமான்டிக் டிராமா என்றால் மீதி படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா. படத்தின் திரைக்கதை பிரமாதமாக உள்ளது. சிவகார்த்திகேயன் , பிரியா ஆனந்த் , நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு இன்ஸ்டண்ட் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபீஸ்ஸை புதுமையாக நிறைய விஷயங்களை கொடுத்து மாஸ் ஸ்டேட்டஸ் பயன்படுத்தாமல் ஜெயித்த படங்கள் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக சொல்லலாம். 

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...