Tuesday, January 2, 2024

GENERAL TALKS - இருள் என்னைக்குமே இருளை நீக்காது ! அதேபோல வெறுப்பு என்னைக்குமே வெறுப்பை நீக்காது !


இங்கே இந்த கருத்து ரொம்பவுமே கான்ட்ரோவேர்ஷியலானது. இந்த கருத்து சொல்வதற்கு நன்றாக இருக்கலாம் ஆனால் நடைமுறை சாத்தியப்படுத்துவது கடினம். நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சனை என்றால் கண்டிப்பாக கொதித்து எழுந்து சண்டை போடத்தான் வேண்டும். மேலும் நிறைய விஷயங்கள் இதுபோல இருக்கிறது. இருள் இருளை நீக்காது வெளிச்சயம்தான் நீக்கும் என்றும் வன்முறை வன்முறையை அகற்றாது அன்பு மட்டும்தான் வன்முறையை அகற்றும் என்று சொல்லும் பாதை ரொம்பவுமே ஐடியல்லிஸ்டிக்கான நடைமுறையில் சாத்தியம் இல்லாத பாதை. நீங்கள் மற்றவர்களிடம் கடினமாக நடந்துகொண்டால்தான் வெற்றியை அடைய முடியும், உங்களுடைய சக்தியை அதிகப்படுத்தவேண்டும் என்றால் அதிகாரமான மனப்பான்மை மட்டும்தான் உங்களுக்கு தேவை. அன்பான மனப்பான்மை உங்களை அப்பாவியாக மாற்றிவிடும். இங்கே இன்னோரு எக்ஸ்செப்ஷன் சொல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்பாக நடந்துகொண்டாலும் உங்களுக்கான வேலை நடக்கும் என்னும் பட்சத்தில் எப்படியோ அதிசயமாக உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக நிறைய வாழ்த்துக்களை சொல்லிதான் ஆகவேண்டும். அதிரஷ்டம் உங்களுடைய பக்கம் இருக்கிறது. நிறைய நிறுவனங்களில் HR மேனேஜ்மெண்ட் இருப்பதே இப்படி பணி நேர கடினத்தன்மையை மேனேஜ்மெண்ட் பண்ணவேண்டும் என்பதால்தான். உங்களுடைய வேலையை கண்டிப்பாக பிடித்து உங்களால் செய்ய முடிந்தால் அன்பான மனப்பான்மை உங்களுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கலாம் ஆனால் உங்களால் அப்படி பண்ண முடியவில்லை. உங்களுக்கு உங்களுடைய வேலை பிடிக்கவில்லை, உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து உங்களுடைய மனதுக்குள் சென்றுகொண்டு இருந்தால் அதனை சரியாக்க கடினமாக வேலை பார்க்கும் செயல்களும் வன்முறையான விஷயங்களுமே சரியானதாக இருக்கும். இங்கே அன்பு என்பது அல்லது நல்ல விஷயங்களை பண்ணுதல் என்பது எப்போதுமே மோசமான கொடியவர்களுக்கு மட்டுமே இலாபம் இலாபமாக ஈட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்பதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெர்ஸனல் கருத்து என்னவென்றால் இந்த உலகத்தின் மிகவுமே மோசமான விஷயம் நண்மைதான். நான் என்னுடைய நன்மைக்காக செய்கிறேன். நான் உன்னுடைய நன்மைக்காக செய்கிறேன். நான் அடுத்தவர்களின் நன்மைக்காக செய்கிறேன், நான் வருங்கால நன்மைக்காக செய்கிறேன் என்று ஒரு ஒரு கேட்டவரும் தாங்கள் செய்த கெட்ட செயல்களுக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட - நன்மைக்காக செய்தேன் - என்ற வகையில் இருக்கும் காரணங்களை வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த உலகத்தில் மாற்ற முடியாத விதி ஒன்று உள்ளது. இங்கே ஒருவருக்கு செய்யக்கூடிய நன்மை என்பது இன்னொருவருக்கு செய்யக்கூடிய தீமைதான். இன்னொருவருக்கு நீங்கள் கெட்ட விஷயங்கள் பண்ண வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது அப்படி ஒரு கட்டாயம் இருப்பதால்தான் உங்களுக்கு கண்டிப்பாக நன்மை நடக்கும். நீங்கள் இங்கே எதுவுமே பண்ணவில்லை என்றால் உங்களுக்குமே எந்த நன்மையும் நடக்காது !!

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...