Friday, June 7, 2024

GENERAL TALKS - காதலில் இருக்கும் தொலைவுகள் !



ஒரு காதலன் ஒரு காதலியை பார்த்து சொன்னான், உனக்கும் எனக்கும் நடுவில் இருக்கும் தொலைவுக்கு ஒரு அளவு இருந்திருந்தால் நான் அந்த அளவை தெரிந்துகொண்டு எத்தனை நாட்களோ எத்தனை மாதங்களோ எத்தனை வருடங்களோ ஆனாலும் உன்னை சேர்ந்துவிடும் நம்பிக்கையுடன் உன்னை அடையும் பயணத்தை என்னால் மேற்கொள்ள முடியும். ஆனால் நமக்கு இருக்கும் தொலைவு இன்பினிட்டி என்பதால் எப்படித்தான் உன்னை சந்தித்து உன்னோடு சேர்ந்து கல்யாணம் வரைக்கும் போகப்போகிறேன் என்று என்னால் எதுவுமே யோசிக்கவில்லை. காதலிப்பது மட்டும்தான் கடைசி வரைக்கும் சராசரியான ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு மாறுபட்ட அனுபவம். பெரும்பாலான சூழ்நிலைகளில் மக்கள் தங்களுடைய இருபத்தைந்து வயதுக்குள்ளே ஒரு முழுமையான காதலை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை பெறுவார்கள். இங்கே மற்ற விஷயங்களில் காணப்படும் எந்த ஒரு சக்தியும் காதலுக்கு பயன்படாது. (பொருளாதார சக்தியை தவிர) காதலை பொறுத்தவரை சம்பந்தமே இல்லாத இரண்டு மனங்கள் என்னவோ ஒரு மாயாஜாலம் நிறைந்த விஷயத்தில் இணைக்கப்பட்டு விடுகின்றன. இன்னொரு பக்கம் விதியின் நேரடியான மொக்கையான விதிகளால் பிரிக்கப்பட்டும் விடுகின்றன. இது எல்லாமே காதலில் புரியாத புதிராகவே இருக்கிறது. காதலுடைய வாழ்க்கைக்கு பெரும்பாலும் பொருளாதார தேவை அவசியமாக இருக்காது (செலவுகள் குறைவுதான்). திருமணம் என்று வந்துவிட்டால் செலவுகள் வரும் வரும் வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் இந்த செலவுகளை எல்லாம் உங்களால் குறைக்கவோ அல்லது இந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் உங்களால் இந்த பொறுப்புகளை மறுக்கவும் முடியாது. இந்த பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற மாட்டேன் என்றாலோ , நிறைவேற்ற விருப்பம் இல்லை என்றாலோ , நீங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சம்பாதித்து எல்லோரையும் காப்பாற்ற நினைத்தாலும் உங்களால் எல்லோரையும் காப்பாற்ற முடியவில்லை என்றாலோ நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்னால் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு வைத்து செய்யப்படும் அபாயம் இருக்கிறது. இந்த மாதிரி காதலை பற்றி பேச நிறையவே விஷயங்கள் உள்ளது ! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !

ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினால...