Friday, June 7, 2024

GENERAL TALKS - காதலில் முக்கியமான விஷயங்கள் !

 


கடைசியாக என்ன சொல்கிறேன் என்றால் காதலிப்பது கல்யாணம் பண்ணிக்கொள்ள போராடுவது இவை இரண்டுமே மிகவும் கடினமானது. காதலிப்பது டிரெய்லர் என்றால் கல்யாணம் மொத்த சினிமா படத்தை போன்றது. முன்னதாக இருப்பது சுலபம் எனினும் அடுத்த கட்டம் பயங்கர கடினமானது.  ஒரு மாயாஜாலம் நிறைந்த இணைப்பு இந்த உலகத்தில் சம்பந்தமற்ற இரு தனித்தனியாக இருக்கும் உயிர்களை எப்படியோ காதலால் ஒன்று சேர்த்துவிட்டு சென்றுவிடுகிறது. பரிணாம வளர்ச்சியில் இனப்பெருக்கம் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒரு தரமான காதலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். காதல் என்பது கம்ப்யூட்டர் கேம் போன்றது. காதலை நீங்கள் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம் ஆனால் உங்களுக்கு நேரம் இருக்கும் வரைக்கும் மறுபடியும் மறுபடியும் உங்களால் காதலால் காந்த இணைப்பால் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடிக்கொண்டு உங்களின் வெற்றியை அடைய போராடிக்கொண்டு உங்களால் காலத்தை நகர்த்த முடியும். காதல்தான் மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் மனித தன்மையை வெளியே கொண்டுவருகிறது. கல்யாணம் மனிதனுக்கு உள்ளே கண்ணுக்கு தெரியாத எத்தனையோ திறமைகளை வெளியே கொண்டுவந்து விடும். காதலிக்கும் பெண்ணின் கரத்தை பிடித்து கதையை கல்யாணம் வரையில் கொண்டுபோவது ஒரு போரை வெற்றியடைவது போன்றதாகும். கல்யாணம் பண்ணி குழந்தைகளை படிக்க வைத்து கரை சேர்ப்பது போரினால் கிடைத்த வெற்றியை தக்கவைத்து ஒரு பாதுகாப்பான நாட்டை ஆட்சி செய்வது போன்றதாகும். காதல் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்குமா என்று கேட்டால் நிச்சயமாக முன்னேற்றத்தை கொடுக்காது. இது எப்படி வேலை செய்கிறது என்றால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை அடையும்போது மட்டும்தான் காதல் என்ற மாயாஜால புத்தகத்தின் ஒரு ஒரு பக்கத்தையும் உங்களால் அன்லாக் செய்து படிக்க முடியும். கடைசியாக நான் சொல்லவரும் பாய்ண்ட் என்னவென்றால் காதல் என்பது மென்மையான ஒரு விஷயம் அல்ல. காதல் என்பது வரலாற்றை போல மிகவும் கரடு முரடாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் ஆகும். கஷ்டப்படும் குடும்பங்களில் இருந்து காதலித்து வெற்றியடைந்த மக்களின் அனுபவங்களை கேட்டு பாருங்கள். காதல் என்பது எவ்வளவு கடினமான செயல் என்றும் பணக்கார மக்களுடைய வாழ்க்கையில் நடக்கும் காதல் திருமணம் போல அனைத்து காதல் திருமணங்களும் நடந்துவிடாது என்றும் உங்களால் அப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...