போதுமான சக்தியை கொடுக்காமல் ஏமாற்றுவது என்று கலியுகத்தில் கடவுள் ஒரு மொக்கையான சிஸ்டமை வைத்து இருக்கிறார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார். கெட்டவர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் ஆசையில் சந்தோஷமாக வாழ்ந்து பின்னாட்களில் நல்ல விஷயங்களில் நிறையவற்றை செய்து கெட்ட விஷயங்களின் தாக்கமே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். இங்கே கடவுளின் கணக்கு என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் ! நிறைய பாவங்களை செய்து நிறைய சம்பாதித்து பின்னாட்களில் நல்ல விஷயங்கள் செய்தோ செய்யாமலே போனாலோ இருந்தாலும் சேர்த்த சொத்துக்கு பணத்தால் நன்றாக வேலியை போட்டுக்கொள்ள முடிகிறது. நல்லவர்களை பொறுத்தவரை அப்படியே ஆப்போசிட் நடக்கிறது. கடவுள் சின்ன சோதனைகளை கொடுக்கிறேன் என்று பாரங்கல்லை தூக்கி தலையில் வைத்து தேவையற்ற பாரங்களை மனிதனின் மீது சுமத்தி அவனால் தாங்க முடியாத அளவுக்கு மானங்கெட்ட சோதனைகளை வைக்கின்றார். இந்த சோதனையில் மனிதன் மனம் உடைந்து போய் சோம்பேறி , போதை பழக்கம் , பயனற்ற மனிதராக வாழ்வது , அடிமைத்தனம் , அறியாமை , வாழ்க்கையில் நடிப்பது , பொறாமை , கெட்ட எண்ணம் , கவர்ச்சி என்று எல்லா விதங்களிலும் நல்லவர்கள் அழுக்கு பாத்திரங்களாக மாறுகிறார்கள். கடவுள் மட்டும் அல்ல சராசரி மனிதர்கள் கூட நல்ல கம்போர்ட் நிறைந்த இடங்களில் கம்போர்ட் நிறைந்த மனிதர்களுடன்தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கொடியவர்கள் நல்ல பணக்கார ஆட்சியில் சந்தோஷமாக இருப்பதால் அவர்களுக்கு "அருள்" கொடுத்து நன்றாக சந்தோஷமாக வாழ்கிறார். நல்ல துணி கூட இல்லாமல் சாப்பாட்டுக்கும் தண்ணீருக்கும் போட்டுக்கொள்ளும் சட்டைக்கும் கஷ்டப்படும் எழை மக்களோடு கடவுள் என்ன "மயிருக்கு" இருக்க வேண்டும் ? என்று நியாயமாக கேட்கிறார் ! ஆனால் ஒரு நல்ல மனிதருடைய இந்த நிலைமைக்கு காரணம் என்ன ? கடவுளின் சோதனை எலிகளாக நல்லோர் பாதிக்கப்பட்டு நாசமாக போகின்றார்கள் !
No comments:
Post a Comment