Friday, June 7, 2024

GENERAL TALKS - நம்ம வாழ்க்கை நம்ம அதிகாரம் !



ஒரு மனிதன் எப்போதுமே அவனுடைய உடலையும் மனதையும் அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்தால் மட்டும் போதாது. உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஊட்டம் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் எந்த அளவுக்கு நாம் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை வைத்து இருக்கின்றோம் ? நமக்கு கீழே அத்தனை பெரும் இருக்க வேண்டும் என்ற கேபிட்டலிஸ்ட் கலாச்சாரத்துக்கு காரணம் நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாததுதான். கடந்த காலத்தில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மட்டும்தான் குடும்பங்கள் எல்லாம் சொல்லும் அட்வைஸ் மூலமாகவே ஒரு பெரிய நீதி துறையே இருந்து வந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? மேலும் நிறைய கலாச்சாரங்களில் இதுபோன்று ஒரு உடல் பராமரிப்பு மற்றும் மனக்கட்டுப்படு இருந்ததால் அந்த கலாச்சாரத்தின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கின்றார்கள். இந்த கட்டுப்பாட்டை கொடுப்பது எது ? அதிகாரம் ! அதிகாரம் என்பது சோம்பேறித்தனமாக மன்னிப்புகளை தேடுவது கிடையாது. நேரத்தை வீணாக்காமல் தண்டனைகளை அனுபவித்துவிட்டு அடுத்த கட்ட வேலையை பார்ப்பதுதான் அதிகாரம். உங்களுடைய மற்றும் உங்களுக்கு பாதிப்பை கொடுத்தவர்களுடைய தண்டனைகளை தள்ளிப்போடுங்கள். ஆனால் மன்னிப்பை மட்டுமே கொடுத்துவிடாதீர்கள். இப்படித்தான் ஏற்ற தாழ்வுகள் நம்முடைய சமுதாயத்தில் உருவானது. இனம் மற்றும் மதம் என்ற கொள்கைப்படி தவறுகள் இருந்தால்தான் தவறு என்றும் பரிகாரம் பண்ண வேண்டும் என்றும் மூட நம்பிக்கைகளும் இப்படித்தான் வந்தது. தவறுக்கான தண்டனைகளை அனுபவித்து வீரமாக வாழவேண்டும். மன்னிப்பை எதிர்பார்ப்பது கோழைத்தனம். அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். விதியை நம்பி வாழ்க்கையை கொடுத்தால் நம்முடைய வாழ்க்கையை குட்டி சுவராக மாற்றிவிடும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...