ஒரு கல்யாணத்துக்கு நம்ம கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் கெஸ்ட்டாக செல்கின்றார்கள். கதாநாயகன் காதலித்த பெண்தான் மணப்பெண் ! கதாநாயகி காதலித்த பையன்தான் மாப்பிள்ளை.!! இவர்களுடைய கல்யாணத்துக்கு சென்று செலவு வைத்துவிட்டு வந்துவிடலாம் என்ற நோக்கத்துடன் செல்லும் இவர்களுடைய பயணத்தில் எப்படி இவர்களுடைய அனுயூசுவல் கெமிஸ்ட்ரி கொஞ்சம் கொஞ்சமாக ரொமான்ஸ் என்று மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் மொத்தமும் இவர்கள் பேசிக்கொள்வது மற்றும் பழகிக்கொள்வது என்பது மட்டுமே இருக்கிறது. இருந்தாலும் படம் 1.30 மணி நேரத்திற்கு நன்றாக இன்ட்ரெஸ்ட்டாக செல்கிறது. லோகேஷன் மற்றும் காஸ்ட்யூம் தேர்வுகள் சிறப்பாக இருக்கிறது. காமெடிதான் இந்த படத்தில் வேறு ஒரு லெவல். ஒரு சின்ன பட்ஜெட் படத்தில் ரொம்பவுமே எக்பெரிமென்ட்டாக ஒரு ஸ்கிரிப்ட்டை எக்ஸ்ஸிக்யூட் பண்ணி இருக்கிறார்கள். ஒரு டீசண்ட்டான ரொமான்டிக் படம். புதுமையாக ஒரு விஷயம் செய்து இருக்கின்றார்கள். கதாநாயகி மற்றும் கதாநாயகனை தவிர படத்தில் வேறு யாருக்குமே வசனங்களே இல்லை. இவர்கள் இருவரை தவிர்த்து வேறு யாருமே படத்தில் பேசும் காட்சிகளே இல்லை. இந்த அளவுக்கு சவாலான ஒரு கதைக்களம் இருடன்களும் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் படத்தை நன்றாக எடுத்து சூப்பர்ராக எடிட்டிங் பண்ணி இருக்கிறார்கள். மலைக்கோட்டை வாலிபன் போன்ற படங்கள் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment