Saturday, June 1, 2024

GENERAL TALKS - சமீபத்தில் இணைய காணொளிகள் யோசிக்க வைக்கிறது !



இன்னைக்கு தேதிக்கு நமக்கு கிடைக்கும் கன்டென்ட்கள் எல்லாம் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி அடிப்படையில் சரியானதா என்று யோசித்து பார்க்கின்றோமா ? என்பது ஒரு பக்கம் இருக்கட்டுமே . இப்போது "சமையல் என்பது கலகலப்பாளர்களுடன்" என்ற மொக்கை ரியாலிட்டி ஸ்கிரிப்ட் ஷோவை பார்த்துவிட்டு வாழ்க்கையில் இன்ஸ்டாக்ரேம் மற்றும் ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் . ரீல்ஸ் , போன்ற விஷயங்களில் மக்களை முட்டாள் ஆக்குவதுக்கு போதுமான விஷயங்களை கொடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த உலகம் அந்த அளவுக்கு மோசமாகவா போய்விட்டது ? இந்த காணொளியை பாருங்களேன். இவர்கள் மூன்று பெரும் இத்தனை ஆண்டுகள் ஸ்மார்ட்டாக வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்ட மக்களாகத்தானே இருப்பார்கள் ? பின்னால் எப்படி என்ன காரணத்துக்காக இப்படி தங்களுக்கு எதுவுமே தெரியாத அப்பாவிகளை போல நடிக்கிறார்கள் ! இது ஒரு பொழுதுபோக்கு என்றும் வியூஸ் அதிகமாக செல்லும் பட்சத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்ற காரணத்துக்காகவும் இப்படி எல்லாம் பண்ணலாமா ? இது நியாயமற்ற விஷயமாக படுகிறது. மெச்சூரிட்டி இருப்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த தலைமுறைக்கு இப்படிப்பட்ட விஷயங்களை எதுக்காக கொடுத்து செல்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நிஜமாகவே அப்பாவியாக போதுமான படிப்பு வசதி பண வசதி இல்லாத ஆடியன்ஸ், வாழ்க்கையை பற்றி ஒண்ணுமே தெரியாத ஆடியன்ஸ் பார்த்து தொடர்ந்து ஃபாலோ பண்ணி வியூஸ் ஏறும் என்றும் அவைகளால் சம்பாதிக்கலாம் என்றும் இது போல மெச்சூரிட்டி இல்லாத வெட்டி பேச்சு காணொளிகளை போடுகிறார்கள் என்று வலைப்பூ அட்மின்னாக என்னுடைய கருத்து. இந்த மாதிரியான விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். இளம் தலைமுறை குழந்தைகள் இதுபோன்று முட்டாள்தனமான காணொளிகளை பார்த்தால் நன்றாக கெட்டுப்போய் விடுவார்கள் என்பதுதான் இந்த வலைப்பூவின் சார்பாக கொடுக்கப்படும் அட்வைஸ். இன்னைக்கு தேதிவரைக்கும் இன்டர்நெட்டில் சமூக வலைத்தளங்களை இவ்வளவு மோசமாக பயன்படுத்துவார்களா என்று எனக்கு தெரியாது. இப்போது இந்த விஷயங்களை பற்றி இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் என்பதால் சமூக வலைத்தள குற்றங்களை இந்த வலைப்பூவில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...