Saturday, June 1, 2024

GENERAL TALKS - இந்த புள்ளி வரைக்கும் வாழ்க்கை வேற லெவல்லில் செல்கிறது !

வாழ்க்கையை குறை சொல்லவே முடியாது. இன்னைக்கு தேதிக்கு கம்யூனிக்கேஷன் வசதிகள் வேற லெவல்லில் இருக்கிறது. ஃபோன் மூலமாக தெரியாத எந்த விஷயங்களை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இத்தனை விஷயங்கள் இருப்பதால்தான் ஸ்கில் பேஸட் வேலைகளை செய்பவர்களுக்கு இந்த காலம் பொற்காலம். இன்னும் சொல்லப்போனால் 5G வந்த பின்னால் சுமாராக 1 GB வரையிலான தகவல்களை வெறும் 30 நொடிகளில் அனுப்பிவிடலாம் என்றால் நம்முடைய தனிப்பட்ட தகவல்களுக்கு எவ்வளவுதான் மதிப்பு இருக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று யோசித்து பாருங்களேன். இந்த புள்ளி ரொம்ப முக்கியமானது. இன்னைக்கு வரைக்கும் டெக்னாலஜி மிகவும் உச்சகட்டமாக இருக்கிறது. இதுவே பயமாக இருக்கிறது. பிரிவிலேஜ் நிறைந்த மக்களை மட்டும் நம்பவே முடியாது. இவர்களுடைய வாழ்க்கையை பார்த்து நம்மால் பயப்பட மட்டுமே முடிகிறது. மொத்த டெக் உலகத்தையும் தங்களுடைய கைகளுக்குள் வைத்துக்கொண்டு இருப்பார்கள். இருந்தாலுமே இந்த வாழ்க்கையில் பெரிய குறையாக இருப்பது போதுமான ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் நுண்ணூட்டங்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது ! சராசரியாக கிடைக்கும் சம்பளத்தில் அரிசி , பருப்பு , பேஸிக்கான காய்கறிகள் '(காரட் , பீட்ரூட் , முள்ளங்கி , பீன்ஸ்) போன்றவைகளை சாப்பிடுகிறோம். இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களுக்கு கொழுப்பு துகள்களால் இரத்த அடைப்பு உருவாக்கும் அளவுக்கு மோசமான கரையாத கொழுப்பு சத்து உணவுகளைத்தான் யோசிக்காமல் சாப்பிடுகிறோம், நல்ல சத்துக்கள் உள்ள கீரைகள் , சிறு தானியங்கள் , பழங்கள், காய்கறிகளை எல்லாம் சாப்பிட காசு கிடைப்பதே இல்லை. இந்த உலகத்துடைய பெரும்பாலான விவசாய நிலங்களை சேர்ந்து வேலை செய்ய முடிந்தால் தேவைக்கு அதிகமான உணவுகளையே எடுத்துக்கொள்ளலாம். இந்த வாழ்க்கையை வேற ஒரு வெர்ஷன்க்கு கொண்டுபோக வேண்டும். இதுக்கு கண்டிப்பாக கஷ்டப்பட்டே ஆக வேண்டும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...