Friday, June 7, 2024

GENRAL TALKS - வலைப்பூவின் நோக்கம் அப்டெட்




பணம் சம்பாதிப்பதை தவிர்த்து இந்த வலைப்பூவின் நோக்கம் என்ன ? என்று என்னை கேட்டால் சத்தியமாக எனக்கே புரியவில்லை. கிடைத்த தகவல்களை மனதில் தோன்றும் விஷயங்களை ரேண்டம்மாக அடித்து விடுகிறேன். என்னுடைய மனது எப்போதுமே குளிர்ச்சியாகவும் மோசமான நிலையிலும் மட்டுமே இருந்துள்ளது. காரணம் என்னவென்றால் வாழ்க்கை எனக்கு கொடுக்கும் கஷ்டங்கள். பெரும்பாலான நேரங்களில் காலத்தினால் கடவுளால் சாகடிக்கப்பட வேண்டும் என்றே அசுரர்களை உருவாக்கும் விதியின் காரணமாக நானும் கடவுளால் சாகடிக்க பிறந்துள்ளேனா என்று எனக்குள்ளே கேள்வி எழுகிறது. வாழ்க்கை அவ்வளவு மோசமாக செல்கிறது. இதுதான் வாழ்க்கையா என்று கேட்டால் நிச்சயமாக வாழ்க்கை இது கிடையாது. வெற்றிகரமாக வாழவேண்டும் அதுதான் வாழ்க்கை. தோல்விகரமான வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையே கிடையாது. ஒரு சில பேர் நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ ஒரு சின்ன வட்டத்துக்கு உள்ளே அடங்கிவிடுவார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த திருக்குறள் மட்டுமே ஃபாலோ பண்ணினால் வாழ்க்கைக்கு போதும் என்று நல்லவராக வாழ்வதும் முட்டாள்தனம்தான். இன்டர்நெட் மூலமாக எல்லாமே தெரிந்துகொண்டு அடுத்தவர்களை விமர்சனம் பண்ணி பணம் சம்பாதித்து கெட்டவராக வாழ்வதும் முட்டாள்தனம்தான். நிறைய நாட்களில் தனிமை என்னை கொன்று இருக்கிறது. நான் கண்டிப்பாக போராடியே ஆகவேண்டும். என்னுடைய கடந்த காலம் இப்படி மோசமானதாக இருந்திருக்க கூடாது. கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலத்தை மாற்ற என்னென்ன விஷயங்கள் தேவையோ அவை எல்லாவற்றையும் அடைய பணம் தேவை. நிறைய வருடங்கள் போராடினாலும் பணத்தை சேர்க்க முடியாது என்பதே ரியாலிட்டி இருந்தாலும் என்னுடைய முயற்சியில் ஒரு சின்ன பகுதி இந்த வலைப்பூ. நிறைய ஆதரவை கொண்டுவந்து கொட்டுங்கள். கடவுள் எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டார் நீங்கள்தான் சப்போர்ட் பண்ண வேண்டும். 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....