வெள்ளி, 7 ஜூன், 2024

MUSIC TALKS - SAMMADHAM THANDHUTTEN NAMBU IRU SEVVILI POTTATHO AMBU SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச

வெச்ச ஆசை மாறுமா ? வார்த்தை சொன்னா மீறுமா ?
பூத்த பூதான் சூடவா ? பொழுது போச்சே வாடவா ?

சின்ன மலர் இரவோடு பூத்ததோ
கொடி அரும்பொன்று வெடித்தது தழுவத்தான்
உணர்ச்சிகள் அடிக்கடி வளருதோ
கொஞ்சம் காத்திரு பலித்திடும் கனவுதான்
காதல் நோயில் கிடப்பதோ
அதில் காலம் தோறும் துடிப்பதோ
காமன் தொல்லை படுத்துதோ
அது மிஞ்சி நெஞ்சை வறுத்துதோ
மூட உதடு மூட வயசும் இளமையும் துடிக்குது

சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச

அது என்ன இது என்ன தேவையோ
இவள் இரவினில் புரிந்திடும் கவிதைதான்
இரு விழி கரு விழி கொஞ்சிதோ
புது வசந்தங்கள் நமக்கென அமையத்தான்
கைகள் தாவி வருகுதோ ?
இமை விழியை சேர மயங்குதோ ?
நெஞ்சம் நெஞ்சை தழுவுதோ
அவை காவல் மீறி பழகுதோ
தொட்டால் விரல்கள் சுட்டால்
மனது உடல் அது பொங்குது

சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச
பூத்த பூதான் சூடவா ? பொழுது போச்சே வாடவா ?
வெச்ச ஆசை மாறுமா ? வார்த்தை சொன்னா மீறுமா ?
சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - ஆப்பிரிக்கா நாடுகளில் பேசப்படும் மொழிகள் !

  List of African Countries and Their Major Languages Africa is home to more than 1,500 languages. Below is a numbered list of countrie...