வெள்ளி, 7 ஜூன், 2024

MUSIC TALKS - MALARGALE MALARGALE IDHU ENNA KANAVA MALAIGALE MALAIGALE ITHU ENNA NINAIVAA - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !



மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா !

மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா

நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழிவிடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா !

பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழறிந்தால் அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உட;லோடு உயிரை போலே உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா !






கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...