வெள்ளி, 7 ஜூன், 2024

MUSIC TALKS - ENNA SOLLI PAADUVATHO ENNA VAARTHAI THEDUVATHO - TAMIL SONG - VERA LEVEL PAATU

என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

வண்ணம் தரும் தூரிகையே, எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி

மௌனம் ஏனோ என்று கேட்குதே

ராகம் தொடும் நேரம், வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீடுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல்

மூச்சுக்குள் புல்லாங்குழல்

வெரும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை

என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

அந்திப் பிறை வந்து மஞ்சள் வானில் நின்று

உன் அழகின் வண்ணம் சொல்லுதே

பூவின் மடி தூங்கி, தென்றல் மொழி வாங்கி

பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே

தீராத தேடல் ஒன்று

தேடட்டும் நெஞ்சம் இன்று

சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும் இன்ப துன்பம் தன்னை

என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

வண்ணம் தரும் தூரிகையே, எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்தை தேடுவதோ ?

கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...