Friday, June 7, 2024

GENERAL TALKS - மக்கள் மாறமாட்டார்கள்

வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நிறைய கஷ்டப்படும்போது யாருமே சப்பொர்ட்டாக இருக்க மாட்டார்கள். நாமும் யாருக்குமே அப்படிப்பட்ட நிலையில் சப்போர்டாக இருக்க மாட்டோம். காரணம் என்னவென்றால் பணம். பணம் மனிதர்களை இவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் எப்போதோ பிரித்துவிட்டார்கள். இப்போது நம்மிடம் பணம் இருந்தால் நம்மால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் பணம் இல்லை என்றால் எதுவுமே பண்ண முடியாது. நன்றாக வாழவேண்டிய மனிதர்கள் போதுமான பணம் இல்லாததால் தங்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நிற்பதை நான் பார்த்து இருக்கிறேன். அடிப்படையில் இங்கே பணம் மட்டும்தான் எல்லாமே. பணம் உங்களிடம் இருந்தால் நீங்கள் செய்யும் அனைத்து தவறுகளும் நியாயமாக மாற்றப்படுகிறது. பணம் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் பண்ணும் அனைத்து நல்ல விஷயங்களும் கெட்டவையாக மாற்றப்பட்டு நீங்கள் உயிருடன் சிதைக்கப்படுகிறீர்கள். உங்களால் நேரத்துக்கு சாப்பிடவோ தூங்கவோ பற்களை துலக்கவோ குளிக்கவோ என்று எதுவுமே பண்ண முடியாது. பணத்துக்காக நீங்கள் உயிரை கொடுத்து போராட வேண்டியது இருக்கும். இன்றைக்கு தேதிக்கு உங்களை உதாசீனமாக பார்க்கும் மக்கள் உங்களை அவமானப்படுத்தி அனுப்புவார்கள். உங்களுக்கு அப்போதே வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றும். இப்படி நடத்திய அந்த மக்களே உங்களிடம் பணம் சேர்ந்துவிட்டால் உங்களுடைய பார்வை பட தவம் இருப்பார்கள். உங்களுடைய இரவு உணவை அவர்களுடைய வீட்டில் முடித்துக்கொள்ள அழைப்பார்கள். இங்கே எல்லாமே பணம்தான். சொல்லப்போனால் உடலும் மனதும் சரியான வகையில் அமைந்தால் வாழ்க்கையில் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம். உங்களுடைய உடலும் மனதும் சரியான வகையில் அமைந்துவிட்டால் வாழ்க்கை உங்களுக்காக அன்லாக்காக மாறிவிடும் என்றால் பணத்தை சம்பாதித்தே ஆகவேண்டும். இது வாழ்க்கையில் நீங்கள் விட்டுக்கொடுக்க கூடாத ஒரு அட்வைஸ். இதுக்கு மேலும் பணம் தேவை அல்ல மனித தன்மைதான் முக்கியம் என்று சிவாஜி அவர்களின் பாரத விலாஸ் படத்தை பார்த்துவிட்டு மொக்கை போட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...