இந்த விதியை நாம் எப்படி சொல்ல வேண்டுமென்றால் நாம் யாருக்காவது எதாவது ஒரு மாற்றத்தை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருப்போம். அந்த மாற்றத்தை செய்து கொள்வதால் அவர்களுக்கு நன்மைதான் கிடைக்கும். ஆனால் அவர்கள் நமக்காக அந்த மாற்றத்தை செய்ய மாட்டார்கள். பின்னாட்களில் கஷ்டப்படுவார்கள். ஆனால் அந்தக் கட்டத்திலும்.நமக்கு நாம அந்த காலத்தில் கொடுத்த ஆதரவுக்கான நன்மதிப்பையும் நன்றிக் கடனையும் செலுத்த மாட்டார்கள்.
நாம் யாருக்காவது ஒரு மாற்றத்தை சஜஷன் செய்து கொள்ள சொல்லி கேட்டுக்கொண்டு இருந்தால் இந்த மாற்றம் அந்த மனிதனுடைய வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு நன்மையை உருவாக்கக் கூடியது என்ற வகையில் தான் நாம் சொல்லி இருப்போம். ஆனாலும் அந்த நன்மையை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை நான் நானாக என்னுடைய போக்கில் மட்டும் தான் இருக்கப்போகிறேன் என்று இருக்கக்கூடிய மக்கள் எப்பொழுதுமே நிறைய விஷயங்களில் நிறைய விஷயங்களை இழந்து விடுவார்கள்.
மாற்றம் என்பது மனிதருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டமாகும். ஒரு மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தான் என்றால் அவனுடைய வாழ்க்கை ஒரு முட்டாள் உடைய வாழ்க்கையாக கருதப்படுகிறது. நமக்கு யாராவது ஒரு விஷயத்தை மாற்றிக்கொள்ள சொல்லியோ அல்லது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை செய்ய சொல்லியோ சொன்னால் அவர்களை நாம் கவனமாக கேட்டு அவர்கள் எந்த வகையில் மாற்றத்தை செய்ய சொல்லுங்கள் என்று பார்க்க வேண்டும்.
மேலும் இந்த மாற்றங்களை செய்வதில் பிரச்சனை என்ன என்பதையும் எதற்காக இப்படி ஒரு மாற்றத்தை நம்மால் செய்ய முடியும் அல்லது முடியாது என்ற வகையிலும் நிறைய கருத்துகளை கருத்து பகிர்வாக செய்ய வேண்டும்.நமக்காக கருத்துப் பதிவு செய்ய நேரம் கொடுக்காமல் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆட்களுக்கு எப்பொழுதுமே நம்முடைய காலத்தை கொடுக்கக்கூடாது. அவர்களுக்காக கொடுக்கப்படும் காலம் என்பது பயனற்றது. காலத்தின் வேல்யூ என்பது அவர்களுக்கு தெரியாது.
காலம் என்பது மிகவும் அரிதான விஷயமாகும். காலம் என்பது எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட லிமிட்க்குள் அடங்கக்கூடிய ஒரு விஷயம். இந்த காலம் இந்த வயது இந்த நேரம் இப்படி சென்று விட்டால் பின்னாட்களில் மறுபடியும் அந்த காலமும் வயதும் கிடைக்கவே கிடைக்காது. காலம் இருக்கும் போது வெற்றியடைய வேண்டும், வாலிபம் இருக்கும் பொழுதே சாதித்துக் கொள்ள வேண்டும்.
நமக்காக எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்துள்ள மாட்டார்கள். ஆனால் நாம் தான் எல்லா மாற்றங்களையும் அவர்களுக்காக செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்காக நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் காலத்தை நாம் அவர்கள் மற்றவர்களுடைய அன்கண்டிஷனல் ஆன அன்பை நினைத்து அந்த அன்புக்காக காலத்தை அதிகமாக செலவு செய்துவிட்டால்.அவர்கள் நிச்சயமாக நம்முடைய அன்புக்கு பரிச்சயம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள்.
காரணம் என்னவென்றால் உண்மையான அன்பு என்பது சரியான மாற்றத்தை சரியான நேரத்தில் செய்பவர்களுக்கு மட்டுமே தான் நினைக்கிறது. என்னால் இந்த மாற்றத்தை செய்ய இயலாது என்று சொல்பவர்கள் அனைவருமே நிறைய விஷயங்களில் தவறுதலாக.மோசமாக நடந்து கொள்வார்கள்.
நான் உனக்காக இந்த மாற்றத்தை செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன்கள். நான் உனக்காக இந்த மாற்றத்தை செய்து கொள்வேன் - இல்லை என்றாலும் நீ சொன்ன கருத்து நியாயமான கருத்து என் பதால் இந்த மாற்றத்தை நான் செய்து கொள்வேன் என்று வாழ்பவர்கள் சிறப்பான ஹீரோக்கள் !
1 comment:
This is also nice bro!
Post a Comment