Tuesday, July 15, 2025

ARC-G2-002

 



தர்மம் தலை காக்கும் ஒரு விவசாயி கடுமையான பஞ்சத்தில், சோற்றுக்கு வழி இல்லாமல் தனது நிலம் தரிசாக கிடப்பதை பார்த்து கண் கலங்கினான். அப்போது அவன் கண் முன்னே ஒரு ரிஷி பாத யாத்திரை செல்வதை கண்டு வேகமாக அவரிடம் ஓடியவன் ரிஷியை விழுந்து கும்பிட்டு “தாங்கள் எனக்கொரு உதவி வேண்டும்” என்றான், "கொடுப்பதற்கு என்னிடம் பணமோ பொருளோ ஒன்றும் இல்லையப்பா" என்று ரிஷி கூற. “சாமி நான் கேட்கும் உதவி. இப்போது நான் கடுமையான பஞ்சத்தில் இருக்கிறேன், எனது மனைவி மக்கள் எல்லாம் பசியால் தினம் அழும் சத்தம் என் சதரமே கூசுகிறது”, "சரிப்பா அதற்கு நான் என்ன செய்ய முடியும்!" எனக்காக நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும், "என்ன? பிரார்த்தனை!" அதாவது என் ஆயுள் முழுவதும் எனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அத்தனையும் இப்போதே கொடுக்கும் படி நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும் "அட! அப்படி நான் பிரார்த்தனை செய்தால் உனது ஆயுள் சீக்கிரமாக முடிந்துவிடுமே!" பரவாயில்லை சாமி! என் மனைவி மக்கள் வயிறாற உணவு உண்டாலே போதும் என்றான். அவன் கேட்ட வரத்தால் அதிர்ந்துபோன ரிஷி "சரி உன் விருப்பப்படியே செய்கிறேன. என்று கூறி அப்படியே அவன் நிலத்தில் அமர்ந்து கடவுளிடம் அவனுக்காக பூஜித்து பிரார்த்தனை செய்கிறார், சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த ரிஷி வீட்டிற்கு சென்று பார்! உனக்கொரு அதிசயம் காத்திருக்கு வேகமாக வீட்டுக்கு வந்ததும் வீடு முழுவதும் அரிசி காய்கறிகள் பழங்கள் அவனுக்கும் அவன் மனைவி குழந்தைகளுக்கும் ஆனந்தம் தாங்கவில்லை கடவுள் கண்ணை திறந்து விட்டார். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறதே ஆனந்தமாய் உண்டனர். மாதங்கள் பல செல்ல, மீண்டும் அதே வழியில் வருகிறார் இங்கே ஒரு விவசாயியை பார்தேனே! அவன் உயிரோடு இருக்கிறானா இறந்துவிட்டானா என அக்கம் பக்கம் பார்க்கிறார். அப்போது மக்கள் அவன் குடிசையில் இருந்து கூட்டம் கூட்டமாக உணவு பொருள்கள் எடுத்து செல்வது பார்த்து வியந்து, இன்னுமா இவன் விதி முடியவில்லை கிடைத்த உணவை தர்மம் அல்லவா செய்கிறான் ரீஷி கண்களை மூடி தியானித்து மறுபடியும் கடவுளிடம் விளக்கம் கேட்கிறார். “அதற்கு ரீஷியே நீங்களோ என் நேசமிகு மனிதர் நீங்கள் கேட்டதால் அவனுக்கு அவன் ஆயுள் வரையான உணவை கொடுத்தேன் ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா அந்த உணவை தன்னை போல ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தானம் செய்து கொண்டு இருக்கிறான். அவன் நிறுத்தும் வரை நானும் நிறுத்தமுடியாது அவன் செய்யும் தானம் அதை பெற்றவர்கள் வாழ்த்துதான் அவனை வாழவைக்கிறது” என்றார் கடவுள். தர்மம் தலை காக்கும்

No comments:

ARC-G2-017

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,” என்ற...