ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராஜாவுக்கு மிகவும் உண்மையாக இருந்தான். அதனால் ராஜாவிற்கு அவனை ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அரசர் ஒட்டகத்தின் மேல் ஏறிக் கொண்டு வெளியே புறப்பட்டார். சில அடிமைகள் ராஜாவிற்கு முன் நடந்து சென்றனர், மற்றவர்கள் ராஜாவுக்கு பின்னால் நடந்து வந்தனர். உண்மையான அடிமை தனது அரசருக்கு அருகாமையிலே குதிரை மீது சவாரி செய்து வந்தான். அரசரிடம் ஒரு பெட்டி இருந்தது. அதில் முத்துகள் இருந்தன. அந்தப் பெட்டி வழியில் ஒரு குறுகிய தெருவில் விழுந்து துண்டு துண்டாக உடைந்து விட்டது. பெட்டிக்குள் இருந்த முத்துக்களும் வீதியில் உருண்டோடின. முத்துக்கள் வீதியில் உருண்டோடுவதைக் கண்ட அரசர், தன்னுடைய அடிமைகளிடம் “எல்லா முத்துக்களையும் சேகரித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். அடிமைகள் ஓடி சென்று முத்துக்களை சேகரிக்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையான அடிமை அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை. அவர் தனது ராஜாவின் பக்கத்திலேயே இருந்து ராஜாவின் உயிரையும், ராஜாவின் வாழ்க்கையையும் பாதுகாத்து கொண்டிருந்தான். அவன் தன்னுடைய ராஜாவின் முத்துக்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை. உண்மையான அடிமையின் மனப்பான்மையைக் கவனித்த மன்னன் அவனுக்குப் பல பரிசுகளை கொடுத்தார். வாழ்க்கை என்பது முத்துகளை விட விலை மதிப்பானவை. ஒரு மனிதனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான போதுமான பாதுகாப்பு இல்லை என்றால் அவனால் இருக்கும் நிலை எப்போது வேண்டுமென்றாலும் பறிபோய்விடும் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தை புரிந்துகொள்ளவேண்டும் !
No comments:
Post a Comment