Wednesday, July 16, 2025

ARC-G2-021

 



ஒருவர் பறவை விலங்குகளை தன் வீடுகளில் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். காட்டிற்கு சென்று வேட்டையாடி ஏதேனும் ஒரு பறவை அல்லது மிருகத்தை கொண்டு வந்து தன் வீட்டிலேயே கூண்டினுள் வைத்து அதே போல் ஒரு கிளியை கூண்டினுள் வைத்து பராமரிப்பார். ஒரு முறை அவர் வேட்டைக்கு செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ”என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.” அவரும் தன் வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. ”அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,” என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ”உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!”என்றார். அதற்கு அக்கிளியும், ”என் ஜோடிக் கிளியும் இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.” என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது. ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா! பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள். சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்!

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...