ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தமது நிலைமையை புலம்பிக் கொண்டன. இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும். இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது. ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது. சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய். நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது. அதற்கு சிங்கம் ஆமாம். உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது. அது ஒரு வறண்ட கோடைக்காலம். காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டன. கரடி, நரி மற்றும் குள்ளநரி இவை மூன்றும் சிங்கத்துடன் வேட்டைக்கு சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தன. அவைகள் சிங்கத்தை அணுகியது, அந்த சிங்கமும் அதற்கு ஒப்புக்கொண்டது. இவை நான்கும் வேட்டைக்கு கிளம்பின. இவை மூன்றும் எருமை ஒன்று தனியாக இருப்பதை கண்டு அதை கொல்ல திட்டமிட்டது. நரியும், குள்ளநரியும் முதலில் எருமையை துறத்தத் தொடங்கின. கரடி எருமையை இடைமறித்து நின்றது. சிங்கம் அதை கொன்றுவிட்டது. நரி எருமையை பங்கு போட்டது. அவை மூன்றும் அதன் பங்குகளை எடுத்த போது சிங்கம் கர்ஜித்து கூறியது, ′நண்பர்களே, முதல் பங்கு என்னுடையது ஏனென்றால் அது என் தலைமைப் பதவிக்குரியதாகும். இரண்டாவது பங்கும் எனக்குதான் ஏனென்றால் நான் தான் எருமையை கொன்றேன். மூன்றாவது பங்கும் எனக்குதான் ஏனென்றால் அது என் குட்டிகளுக்கு தேவை. யாருக்காவது நான்காவது பங்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் என்னை வெல்ல வேண்டும். ′ என்றது அந்த சிங்கம். அவை மூன்றும் ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த இடத்திலிருந்து வெளியேறின. நீங்கள் வலிமை உடையவராக இருந்தால், நீங்கள் சொல்வது சரிதான் என்று எண்ணிக்கொள்வார்கள். இது நியாயமா என்றால் அநேகரின் பதில் இல்லை என்பதே!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
புதன், 23 ஜூலை, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TECH TALKS - இந்த இணையதள எடிட் பேஜ்களை வைத்து மூளை சலவை செய்யும் ஆட்கள் !!
TAMIL : மீமெடிக் மூளைச்சலவை என்பது ஒரு நபரின் சிந்தனைச் சூழலைத் திட்டமிட்ட முறையில் 'மீம்ஸ்' (Memes) எனப்படும் கலாச்சாரத் தகவல் அல...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
BNI – முழுமையான விளக்கம் (ஒரு வணிகப் பொறி) BNI (Business Network International) என்பது சாதாரண வணிகக் கூட்டம் அல்ல; உலகளாவிய ரீதியில் “வணி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக