புதன், 23 ஜூலை, 2025

ARC-G2-046

 


 ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ஒரு மண் ஜாடி. அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண் ஜாடியிடம், “எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?” என்று கேட்டான். சிறுவனே, நான் உடனே இந்த அழகிய உருவத்தைப் பெற்று விடவில்லை. நான் இந்தப் பூமியில் மண்ணாக, மனிதர்களின் நடைபாதையாக, விலங்குகளின் மேய்ச்சல் தரையாகக் கேட்பாரற்றுக் கிடந்தேன். ஒரு நாள் கலைஞன் ஒருவன் என்னை மண்வெட்டி கொண்டு வெட்டினான். ஆ! அப்போது நான் அடைந்த வேதனை. சகிக்க முடியாத ஒன்று. ”பொறு, பொறு.” என்று ஆணையிட்டது. என் உள் மனம். பொறுத்து இருந்தேன். பின்னர் என்னை நனைத்து வைத்துப் பிசைந்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து. அப்பப்பா. அப்போது நான் பட்ட இம்சை. கதறினேன். பொறு, பொறு என்றது என் உள் மனம் மீண்டும்! பிசைந்த என்னைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றினான் அவன். எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வந்தது. சுற்றிச் சுற்றி இறுதியில் ஜாடியாக வடிவு எடுத்தேன். ஆனாலும் நான் அனுபவித்த வேதனை. அதிகம். பிறகு என்னைத் தீயிலிட்டுப் பொசுக்கினான். அப்போது வெந்து உறுதிப்பட்டேன். தாங்க முடியாத எரிச்சல். அதன் பிறகு ஏதேதோ வண்ண ரசாயனங்கள் என் மேனியில் பூசப்பட்டது. தகிப்பு. தாங்க முடியாத வேதனை. ”இன்னும் சற்று பொறுத்திரு.” என்றது என் உள் மனம். தகதகப்பு. வண்ணப் பூச்சு. ஈர்க்க வைக்கும் கோலப் புதுமை. ஆஹா. இப்போது நான் அழகின் அற்புதம். காண்போரை லயிக்க வைக்கும் எழில் ஜாடியாக கலைப்பொருளாகக் காட்சி அளிக்கிறேன்” என்று அதன் அழகின் ரகசியத்தையும், அதற்காக அது அடைந்த அவதிகளையும், அது காட்டிய பொறுமைகளையும், சொல்லி முடித்தது அந்த மண் ஜாடி.

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - SHARK BOY AND LAVA GIRL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

  மேக்ஸ் என்ற பத்து வயது சிறுவன், தனிமையும் பள்ளியில் துன்புறுத்தலையும் சந்திக்கிறான். அதிலிருந்து தப்பிக்க, அவன் பிளானெட் ட்ரூல் என்ற கனவுல...