பயணம் மிகவும் குறுகியது இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார். அந்த பெண் புன்னகையுடன், “எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்” என பதிலளித்தார். இந்த பதில் அடித்த அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க வைத்தது. அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டாள். அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் ஆபத்து கொண்டது. யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா, காரணம் இல்லாமல் அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள், அமைதியாக இருங்கள், புறக்கணியுங்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில், நமது பயணம் மிகவும் குறுகியது.
No comments:
Post a Comment