நெப்போட்டிஸம் என்பது என்னவென்றால், சினிமா உட்பட சினிமாவை சார்ந்த மற்ற தொழில்களையும் சேர்த்து ஒரு மீடியா என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த மீடியாவில் எப்பொழுதுமே ஏற்கனவே சம்பாதித்தவர்களின் சொந்தக்காரர்கள்தான் அல்லது நேரடி வாரிசுகள் தான். மறுபடியும் அந்த வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும்.
மற்றபடி அந்த துறையில் வேறு யாருமே புதிதாக சேரக்கூடாது. அப்படி புதிதாக சேர்ந்தால் குடும்பம் குடும்பமாக சம்பாதிக்கக்கூடிய இவர்களுடைய அரசியல் வீணாக போய்விடும். அவ்வாறு புதிதாக சேருபவர்கள் புதிதாக வந்து போதுமான பண வசதி இல்லாமல் ஜெயித்து காட்டுபவர்கள் என்றும் ஒரு காலத்தில் இந்த குடும்பத்தை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள் என்றும் பயந்து ஒரு குடும்பம் மட்டுமே உள்ளே இருக்கக்கூடிய மக்களை தங்களுக்கு கீழே கொண்டு வந்து ஆட்சி செய்வதற்குப் பெயர்தான் நெப்போட்டிஸம்.
இது எப்படி சாத்தியமாகிறது என்றால் ஒரு மிகப்பெரிய நடிகருடைய அல்லது தயாரிப்பாளருடைய அழுது இயக்குனர் உடைய மகனாக இருந்தால் அந்த பையனுக்கு ஈஸியாக எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடும்.
நடிக்க கூடிய வாய்ப்போ அல்லது இசையமைப்பு வாய்ப்போ அல்லது படங்களை உருவாக்க கூடிய வாய்ப்போ அவனுக்கு ஈஸியாக கிடைத்து விடும். அதுவே ஒரு புதிய எந்த பின்னணியும் இல்லாத மனிதன் ஒரு புது தொழில் கற்ற இளைஞன் ஒரு கலையை கற்றுக்கொண்ட ஒரு மனிதனாக எப்படியாவது சினிமாவில் ஒரு நடிகராகவோ, இசையமைப்பாளர் ஆகவோ அல்லது ஒரு இயக்குனராகவோ மாறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த புதிய நடிகனை எல்லோருமே இந்த சம்பாதிக்கும் குடும்ப ஆட்கள் உள்ளுக்குள்ளேயே பேசி வைத்துக்கொண்டு புதிய கலைஞனை எந்த இடத்திலும் நீங்கள் சேர்க்க வேண்டாம் வாய்ப்புகளை கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அவனை எல்லா இடத்திலும் இருந்து துரத்தி விட்டு விடுங்கள் என்றும் சொல்லி விடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக