Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 019


நம்முடைய சினிமாக்களில் இருக்க கூடிய பிரச்சினை என்னவென்றால் நம்முடைய சினிமா வெளியிடப்படவதே மிகப் பெரிய அரசியலாக கொண்டு இருக்கிறது. ஒரு சினிமாவை எடுத்து வெளியிட்டு பணத்தை சம்பாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் சினிமாவுக்கான உலகம் என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமான அமைந்திருக்கிறது. இந்த காலத்தில் இந்த தமிழ்நாட்டில் சினிமாவை வெளியிட வேண்டுமென்று ஒரு தயாரிப்பாளர் ஆசைப்பட்டால் இங்க தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதன்மையான பிரச்சனை என்னவென்றால் அதிகமான படங்களை ஒருவர் ஒரு படத்துக்கு மேல் இன்னோரு படம் என்று கம்பேரிஸன் செய்து செய்து மட்டமான அறிவிப்புகளை நல்ல படங்களுக்கு அளித்து நல்ல படங்கள் வருவதையே நம்முடைய தமிழ் நாடு ஆடியன்ஸ் தடுத்து விடுகிறார்கள். சும்மா காரணமே இல்லாமல் நிறைய சண்டைக் காட்சிகள், துப்பாக்கி காட்சிகள் என்று ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வருகிறது. இந்த படங்களில் எல்லாம் சுத்தமாக லாஜிக் என்பதே கிடையாது. இருந்தாலும் இந்த படத்தை எல்லாம் கிட்ட செய்துவிட்டு ஹாலிவுட் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் நல்ல கதையமைப்பு கொண்ட ஒரு படம் வந்தாலும் போதுமான மார்க்கெட்டிங் இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டர்கள் உள்ளூர் அரசியல் காரணமாக அந்த படங்கள் மிகவும் கடினமாக வெளியிடப்பட்டு மிகவும் கடின உழைப்பு கொடுக்க செய்து மிகவும் கடினமாக பணத்தை எடுக்க முடியாமல் தோற்றுப் போகிறது. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு மட்டும் தான் இங்கே சினிமா தேவைப்படுகிறது என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரிகிறது? மலையாளம் மிகவும் தெளிவான கதையமைப்பு கொண்ட படங்களை சப்போர்ட் செய்கிறது. பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்ற கலாச்சாரம் மலையாளத்தில் இல்லை. இதனால் தான் இன்று வரையில் மலையாள திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமான மக்களின் பாராட்டுக்களையும் மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...