இந்த படம் நடிகர் சிபிராஜ் சத்யராஜ் அவர்களுக்கு குறிப்பாக ஒரு கம் பேக் திரைப்படம் என்றே சொல்லலாம். நேர்மை தவறாத மிகவும் துல்லியமான தடயங்களை ஆராயும் மனதுடைய ஒரு போர் குணம் கொண்ட சப் இன்ஸ்பெக்டராக வெளிவரும் சிபிராஜ் ஒரு கேஸில் நுணுக்கமாக தகவல்களை சேகரித்து தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு சம்பந்தமில்லாத கடத்தல் கேஸ் இன்னொரு கட்டத்தில் ஒரு பேருந்தில் நடந்த கொலை சம்பவத்துக்கு சம்பந்தப்பட்டதாக அமைகிறது.
இந்த இரண்டு கேள்விகளுக்குமே பொருத்தமாக இருக்கக்கூடிய இணைப்புகளை.தேடிக்கொண்டு இருக்கும் சிபிராஜ், அங்கே நடக்கும் விசாரணைகளும் அந்த விசாரணைகளில் நடக்கக்கூடிய திடுக்கிடும் திருப்பங்களும் என்று இந்த படம் மிகவும் வேகமாக நகர்கிறது. ஒரு வில்லனாக நடிகர் திலீப்வர்களை வெளியிட கடைசி வரையில் கிளைமாக்ஸ் வரையில் ஒரு சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தது. இயக்குனரின் ஒரு ஃபைனல் டச்.
இந்த கதை ஒரு COMEBACK படமாக வெளிவந்த ஒரு டீடெய்ல்ட் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக கண்டிப்பாக ஆடியன்ஸின் எதிர்பார்ப்புக்கு இருந்திருக்கலாம் இருந்தாலும் இந்த படத்தின் கதைக்களமானது கிளைமாக்ஸ் என்று வரும்போது இன்னும் கொஞ்சம் டுவிஸ்ட்கள் அமைத்து இரண்டாம் பாகத்துக்கு LEAD கொடுத்து அமைந்திருக்கலாம் அல்லது விரிவாக இந்த கதை தொடர்வது போல அமைந்திருக்கலாம் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையை ராசனையாக ரசித்ததான் மூலமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
படத்தை சமீபத்தில் அருள்நிதி அவர்களுடன் நடிப்பில் வெளிவந்த தைரிய திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.இந்த படத்துடைய விஷுவல் ஸ்டைல் அந்த படம் அளவுக்கு சரியாகவே இருக்கிறது. மற்றபடி கமர்ஷியல் ஆடியன்ஸின் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு டீசன்ட் சர்ப்ரைஸ் ஆன சஸ்பென்ஸ் திரைப்படம்.
No comments:
Post a Comment