Tuesday, July 15, 2025

ARC-G2-009

 



நான் யாருன்னு - ஒரு நாள் மரத்தடியில் ஞானி ஒருவர் உபதேசம் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு கதை சொன்னார். ஒரு தவளை சேற்றில் வளை தோண்டி வாழ்ந்து வந்தது. அதனிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. அதை தன் சேற்று வளையில் வைத்து, வெகு கவனமாய் தவளை காவல் காத்து வந்தது. அந்த வழியே, வளை அதிர ஒரு யானை போயிற்று. தவளைக்கு ஒரே கோபம். யானையை எட்டி உதைப்பது போல, கால் நீட்டி வீசியது. ஏய். உன் மனதில் உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எட்டி நான் ஒரு உதை விட்டால் என்ன ஆகும் தெரியுமா " என்று கத்தியது. யானைக்கு காதில் விழவேயில்லை. வெகு தூரம் போய் விட்டது."யானை மறுபடி வரட்டும், நான் யாரென்று காட்றேன் " என்று மறுபடி தவளை கத்தியது. " கதை எப்படியிருக்கிறது " என்றார் ஞானி. " தமாஷா இருக்குங்க சாமி " என்றார் ஒருவர். " என்ன தமாஷ் " " யானை பலமெங்கே, தவளை பலமெங்கே, லேசா யானையோட கால் பட்டா தவளை கூழ்கூழா போயிடும், ஆனால் கத்துது. " தவளை ஏன் கத்துச்சு?" " தெரியல சாமி " " உனக்கு தெரியுமா?” மற்றொருவரிடம் ஞானி கேட்டார். " அதனுடைய குணம் சாமி என்றார் மற்றவர் " " இல்லை, அதுகிட்ட ஒரு ரூபாய் இருந்ததால உண்டான கர்வம் " என்றார் ஞானி. " ஆமா சாமி, மனுசாள்கிட்ட கொஞ்சம் பணம், கொஞ்சம் புத்தி, கொஞ்சம் அறிவு, கொஞ்சம் திறமை இருந்தா போதும், ரொம்ப கத்துவாங்க " என்றார் இன்னொருவர். " எப்படி கத்துவாங்க " என அந்த இன்னொருவரிடம் ஞானி கேட்டார். " நான் யாருன்னு காட்டுறேன் பாருன்னு " என்றார் இன்னொருவர். " கரெக்ட் ". " கடவுளுக்கு முன் நாமெல்லாம் தவளைகள். அவர் கொடுத்த புத்தி, அவர் கொடுத்த செல்வம், அதுவே அத்தனை கர்வம் தருமா? ஆனால் தருகிறது என்றார் ஞானி.


No comments:

ARC-G2-017

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,” என்ற...