Tuesday, July 15, 2025

ARC-G2-013



 ஒரு வீட்டு தோட்டத்துல ரெண்டு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ரெண்டு சேவல்ல ஒன்னு ரொம்ப பலசாலியாவும் இன்னொன்னு பலம் கொறஞ்சத்தவும் இருந்துச்சு, அதனால அந்த பலசாலியான சேவலுக்கு திமிர் அதிகமா இருந்துச்சு. அந்த திமிர் பிடிச்ச சேவல் எப்பவும் பலம் கொறஞ்ச சேவலோட சண்ட போட்டுக்கிட்டே இருக்கும், எங்க அந்த சேவல் போனாலும் அதுக்கு பின்னாடியே போயி அதுக்கு தொந்தரவு கொடுத்துகிட்டே இருக்கும். ஒருநாள் பலமில்லாத சேவல் குப்பைல இருக்குற புழு பூச்சிகள சாப்டுகிட்டு இருந்துச்சு, அப்ப அங்க வந்த திமிர்பிடிச்ச சேவல் அத சாப்பிட விடாம தொந்தரவு செஞ்சுச்சு. உடனே பலமில்லாத சேவல் வேற இடத்துக்கு உணவு தேட நடந்து போச்சு, அத பாத்த திமிர்பிடிச்ச சேவல் அந்த பயம் இருக்கணும்னு சொல்லி ஒட்டு மேல ஏறி கூவ ஆரம்பிச்சது மரத்துமேல இருந்து இத பாத்துகிட்டு இருந்த பருந்து ஒண்ணு ரொம்பநாளா இந்த சேவல்கள சாப்பிடணும்னு காத்துகிட்டு இருந்துச்சு, ஆனா அந்த வீட்டுக்காரர் வளக்குற நாய்க்கு பயந்து கீழ இறங்காம மரத்துமேலயே இருந்துச்சு அந்த பருந்து ஆனா இன்னைக்கு ஓட்டுமேல ஏறி கூவுன சேவல பாத்தது, அடடா இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டம் இந்த திமிர் பிடிச்ச சேவல் தன்னோட திமிரினால பாதுகாப்பான இடத்த விட்டுட்டு ஓட்டு மேல நிக்குதுனு சொல்லி பறந்து வந்து அத தூக்கிகிட்டு போய்டுச்சு. அப்பத்தான் வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டுங்கிற பழமொழி திமிர்பிடிச்ச சேவலுக்கு புரிய ஆரம்பிச்சது, தனக்கு பலம் இருக்குங்கிற காரணத்துனால பலம் கொறஞ்ச சேவல தொந்தரவு செஞ்சதுக்கு தனக்கு சரியான தண்டனை கெடச்சுடுச்சுன்னு நினச்சு வருத்தப்பட்டுச்சு அந்த திமிர் பிடிச்ச சேவல்.

No comments:

ARC-G2-017

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,” என்ற...