ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகு கொஞ்சும் எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் இடமெல்லாம் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதித்த தங்க நகைகளும் குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளே நுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் அடுக்கியுள்ள ஒரு அறையினுள் நுழைந்து அந்தத் தங்கம் மின்னும் அறையினை மிகச் சாதரணமாக கடந்து விடுகிறது. அதற்கு அந்தத் தங்க கட்டிகளொன்றும் அத்தனைப் பெரிதாக ஈர்த்து விடவில்லை. சற்று தூரம் விலகிச் சென்றது. அங்கே ஒரு பழைய பொம்மை விழுந்து கிடப்பது கண்களில் பட்டு விட அய். யென்று கூச்சலிட்டவாறு ஓடிப்போய் அந்தப் பொம்மைமை எடுக்கிறது, அதனருகில் இருக்கும் இன்னொரு கதவைத் திறக்கிறது அந்த அறையெங்கும் அழகழகிய வேலைப்பாடுகள் அடங்கியப் பல பொம்மைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு எதை எடுப்பது என விடுப்பதென்றே புரியவில்லை ஆனால் தங்கக்கட்டிகளை அலட்சியமாகக் கடந்து போனது. அடுத்து ஒரு தொழிலதிபர் ஒருவர் அவ்வழி வருகிறார். அந்தக் குழந்தை தனது கை நிறைய பொம்மைகளை வாரிக் கொண்டு வருவதைப் பார்த்து விட்டு அந்த அறைக்குள் போகிற அத்தனை அழகழகான பொம்மைகள் அவருக்கு துளி கூட ரசனையையோ பெரிய ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவேயில்லை. வேறென்ன உண்டா என அறையின் மறு கதவைத் திறக்கிறார். அங்கே காணுமிடமெல்லாம் தங்கம். அதிலும் அவருக்கு அழகாக வடிக்கப்பட்ட சிலைகளோ, தங்கநகைகளோ கூட அத்தனை பெரிதாகத் தெரியவில்லை. அந்தத் தங்கக் கட்டிகள் அவருக்குப் பெரும் பொக்கிசமாகப் பட்டது. எடுத்து மாறி மாறி முத்தமிட்டவர் நான்கைந்து பெரிய பெரிய தங்கக்கட்டிகளை சுமந்தவாறே வெளியேச் செல்கிறார். அவரைக் கடந்து அவ்வழியே ஒரு சிற்பி வருகிறார். அவருக்கு தங்கக் கட்டிகள் பார்க்கையில் தாளவில்லை, ஆனால் ச்ச என்னப் புண்ணியம் இதில் ஒரு அழகில்லையே, கட்டியாய் தங்கமிருந்து என்ன பயன்? அங்கே கலையில்லையே(?) என்று வருந்தினார். அருகே பார்க்கிறார் அத்தனை அழகழகான பொம்மைகள் சிலைகள் வித விதமா. அடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் அச்சில் வார்க்கப்பட்டவை. செதுக்கப்பட்டவையல்ல. ச்ச இதல்லாம் ஒரு கலையா, செதுக்கி எண்ணத்தில் ஊறுவதை அவரவர். கற்பனைக்கு ஏற்றவாறு அழகழகான வடிவத்தில் வடிப்பதில் ஒரு உயிர் இருக்கில்லையா? அதை விட்டுவிட்டு இதை ஏன் இப்படி ஒருபக்கம் வெறும் பொம்மையாகவும் மறுபக்கம் வெறும் கட்டித்தங்கத்தையும் வைத்திருக்கிறார்களே என்று பொருமிக் கொண்டே வெளியேப் போகிறார். அவரைக் கடந்து ஒரு துறவி அந்தத் தங்க மாளிகையின் வழியே நுழைகிறார். உள்ளே வந்தால் கண்கள் மலர்கிறது. சுவாசம் தாள் மாறாது உள்சென்று வெளியே போகிறது. ஆனந்தம் பேரானந்தம் காணுமிடமெல்லாம் அமைதி, காணுமிடமெல்லாம் அழகு. எங்கும் நிசப்தம். இங்கே அமைதியாக அமர்ந்தாலென்ன என்றெண்ணி” அமைதியாகக் கண்களை மூடி” வளாகத்தின் நடுவே அமர்ந்துக் கொள்கிறார். அமைதியின் ஆரவாரம் அவருக்குள் ஆழமாகச் சென்று அகிலத்தின் தர்மவாய்களை பிசகாமல் திறக்கிறது. உடுத்தும் ஆடையைக் கூட பாரமாக எண்ணும் துறவிக்கு அந்தத் தங்கக்கட்டிகள் “இருக்கும் பொருளாக” கூடத் தெரியவில்லை, எங்கும் சூழ்ந்த அமைதி மட்டுமே அவர் பெரிதாகக் கண்டார். வாழ்க்கை இது தாங்க. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. தனை தீண்டாத ஏதும் தனக்கு பெரிதாகப்பட்டு விடப் போவதில்லை. தன் அறிவிற்கு எட்டியவாறு, தனது ரசனைக்கு இணங்கியே எல்லோரின் ஆசைகளும் கனவும். கற்பனையும் விரிகிறது. எனவே அவரவருக்கு அவரவர் சரி. எனக்கு நானும் உங்களுக்கு நீங்களும் சரி. பிறகு இடையே வந்து இவரை அவரோ அல்லது அவரை இவரோ குறைச் சொல்லி நடப்பதென்ன உலகில்?
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Wednesday, July 23, 2025
Subscribe to:
Post Comments (Atom)
ARC-G2-053
ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...

-
மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி மோனிகா பெலூச்சி ஏத்திட்டா எனர்ஜி தலையை சுத்த வைக்கும் சூறாவளி பொண்...
-
ஒருமுறை ஒரு அரசன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன், தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அத...
No comments:
Post a Comment