வெள்ளி, 25 ஜூலை, 2025

GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #5





பொழுதுபோக்கு என்பது ஒரு போதை. நமக்கான கௌரவத்தை நான் தேடிக் கொள்வதுதான் நமக்கு மரியாதை. நாம் அனைவருமே எந்த விஷயத்தை நோக்கி வாழ்க்கையை நகர்த்த வேண்டுமென்றால் இருக்கக்கூடிய விஷயங்களில் இருக்கும் குறைகளை களைய வேண்டும். எந்த வகையான இஷ்யூஸ் வந்தாலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளக்கூடாது.

நான் இப்படி சொல்லிட்டேனே என்பதற்காக இந்தியன் 2 படத்தைப் போல நீங்கள் நீங்களும் சொசைட்டி திறக்க வேண்டும் என்றும் குறைகளை களைய வேண்டும் என்றும் களை எடுக்க வேண்டும் என்றும் கற்பனையாக செய்து கொண்டு வேலைகளை பார்த்து விடாதீர்கள். 

இந்த படம் ஒரு சகாப்தம். இந்த சகாப்தத்தைப் பற்றி நான் இன்னொரு போஸ்ட் போட்டு பேசுகிறேன். ஆனால் குறைகளை களைய வேண்டும் என்பது நீங்கள் நினைப்பது போல ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. ஒரு நிதானமாக குறைகளை நீக்குதல் என்பது.குறிப்பாக ஒரு வருடத்துக்கு மேல் தேவைப்படக்கூடிய ஒரு செயல்பாடு.

குறைகளை களைவதற்கு முன்னால் உங்களிடம் இத்தகைய குறைகள் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே அப்ரூவல் செய்துகொள்ளவில்லை என்றால் உங்களுடைய குறைகள் உங்களோடு ஒரு பேராசைட்டு போல ஒட்டிக் கொண்டுதான் இருக்க போகிறது.

ஒருவனுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டுமே தான் இருக்கப் போகிறது என்றால் அந்த வாழ்க்கை என்பது போலியானது. உண்மையில் தோல்விகளும் வெற்றிகளும் கலந்த வாழ்க்கைதான் ஒரு சரியான வாழ்க்கையாகக் கருதப்படுகிறது. உங்களுடைய தோல்விகளை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுடைய தோல்விக்கான காரணத்தை உங்களுடைய மூளை யோசித்து கிரகித்துக்கொண்டு இருக்கும்.

இவ்வாறு நீங்கள் தோல்விகளை பற்றி யோசிக்காமல் வெற்றியை மட்டுமே நாட்டம் செலுத்தி கொண்டு இருந்தால் உங்களுடைய தோல்வி உங்களுடைய எந்த வகையில் உங்களை பாதித்தது என்பதை உங்களால் உணரக்கூட முடியாத அளவுக்கு சரியான புரிதல் இல்லாமல் நீங்கள் ஒரு போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...