உங்களுக்கு தெரிந்து இந்த உலகத்தில் ஒரு விஷயம் நல்ல விஷயமாகப் பட்டால் அந்த விஷயத்தை உங்களுடைய வாழ்நாளில் அப்ளை செய்ய எந்த வகையிலும் தயங்க வேண்டாம். காரணம் என்னவென்றால் இந்த பதவியை நான் பதிவு செய்வதற்கான காரணம் இருக்கிறது. நிறைய பேர் தன்னுடைய வாழ்க்கையில்.ஒரிஜினாலிட்டியை போன்று எப்பொழுதுமே அசலான விஷயமாக இதுவரை இந்த உலகத்தில் இல்லாத விஷயமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட அந்த நினைப்பு தான் அவர்களுக்கு தனித்தன்மையாகக் கொடுக்கிறது என்று நம்பும் போது அவர்களை உண்மையில் அப்படி தனிமையாகத்தான் மாற்றி வைத்து விடுகிறது.
நீங்கள் திரைப்படங்களை பார்க்கலாம். ஒரு தனித்தனி திரைப்படங்களிலும் கதாநாயகர்களுக்கும் கதாப்பத்திரங்களுக்கும் தனித்தனியான பின்னணி கதைகள் இருக்கிறது. ஆனால் இந்த பின்னணி கதைகளைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் தனியான ஒரு தனித்த கதை இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல விஷயமல்ல.
மற்றவர்கள் செய்வதைப் போன்று செய்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நானாக ஒரு புத்தம் புதிய யோசனையை தொடங்க வேண்டும். அந்த யோசனை எனக்கான பாதையை காண்பிக்க வேண்டும். அந்த பாதை மற்றவர்களுடைய பாதை போல் இருக்கக் கூடாது என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இது உண்மையில் சாத்தியமில்லை. இந்த உலகில் பல நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவற்றை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இல்லையெனில், அவர்கள் தங்களுக்காக புதிதாக ஒன்றை உருவாக்க முடியும் என்றும், மற்ற நிறுவனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைத்தால், அவர்கள் இறுதிவரை ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள்.
நீங்கள் வாழ்நாளில் செய்யக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு கடைசி காலத்தில் சப்போர்ட்டாக இருக்க வேண்டும். உங்களுக்கான உணவை சம்பாத்திக்கும் அளவுக்கு பணம் உங்களிடம் இருக்கப்போகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.உங்களுக்கான உணவு என்று வரும் பொழுது நீங்கள் ஒரிஜினல் ஆன ஐடியாவை மட்டும் தான் வைத்து சம்பாதித்து இந்த உணவை பெற வேண்டும் என்று நினைப்பதை விட மற்ற ஐடியாக்களில் இருந்து கற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தி நீங்கள் ஜெயித்து காட்டுவது என்பது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.
ஆகவே ஒரு சிந்தனை என்று வரும்போது காப்பி அடித்த சிந்தனையாக நீங்கள் கருத வேண்டாம். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயமாக எடுத்து மேம்படுத்தப்பட்ட சிந்தனையாக நீங்கள் கருதுங்கள். மற்ற மனிதர்களின் யோசனைகளிலிருந்து எடுத்து மேம்படுத்தக்கூடிய இந்த வகையான யோசனை நிச்சயமாக உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கும்.
No comments:
Post a Comment