இந்த உலகத்தில் பேராசையின் போதையில் எவ்வளவு ஆண்டாலும் எவ்வளவு அதிகாரம் செய்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் கடைசியில் நமக்காக ஆறு அடியில் ஒரு குழி மட்டும் தான் பிஞ்சும் அல்லது அரையடியில் ஒரு சொம்பு மட்டும் தான் மிஞ்சும்.
சமீபத்திய இளைஞர்களில் ஒரு குறிப்பிட்ட சில பேர் தங்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதெல்லாம் மிகப்பெரிய வீரம் என்றும் சாதனை என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் கண்டிப்பாக கடினமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.
ஆண்கள் தங்களுக்கு வலிமையான உடலமைப்பு இருப்பதால் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்று மிகவும் தவறான கணிப்பை வைத்து இருக்கிறார்கள். உண்மையில் பெண்களும் ஆண்களும் சமமான அளவிற்கு பலத்துடன் அமைக்கப்பட்ட இருக்கிறார்கள்.
ஆண்கள் தங்களுடைய இயலாமையை ஒரு வகையில் வெளிப்படுத்துவதற்காக பெண்களிடம் அதிகாரம் செலுத்துவது எல்லாம் மிகப்பெரிய வீரம் என்று கற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இணைந்து வேலை பார்ப்பதுதான் மிகவும் சரியான செயல்.
மேலதிகமாக மீடியாக்களும் தொலைக்காட்சி தொடர்களும் பெண்களை சரியாக பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று காட்டுவதே இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு வலிமையற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன்ல் கஷ்டப்படும் ஒரு கதாநாயக மட்டுமே பெண்களை கணிக்கிறார்கள். ஆனால் பெண்களால் நினைத்தால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை.
தொலைக்காட்சிகளில் கற்பனையான தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பு செய்வதை விட்டுவிட்டு உண்மையில் குற்றங்கள் எங்கே நடக்கின்றன? எந்த வகையில் அந்த குற்றங்கள் சட்டத்தின் அடிப்படையில் தடுக்கப்படுகின்றன என்பதை குறித்து ஒரு கவுரவமான.உண்மை ஆவணப்படங்களும். மேலும் தொழில் தொடங்கும்வர்களின் தொழில் நிலைகள் எப்படி இருக்கிறது? தொழிற்சாலைகளில் என்ன மாதிரியான வேலைகள் நடக்கும் ஒரு பொருளை எப்படியெல்லாம் உருவாக்குகிறார்கள் என்பது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களும் தொலைக்காட்சியில் பொழுதுபோக்குக்கு பதிலாக ஒளிபரப்பப்பட்டால் நாட்டின் முன்னேற்றம்.மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மக்களுடைய இயலாமை கடைசி வரையிலும் இயலாமையாக மட்டுமே இருந்துவிட்டு இந்த இயலாமையே காரணம் காட்டி உருவாகக்கூடிய அந்த சின்ன சின்ன சந்தோஷங்களை தேடக்கூடிய மனநிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மீடியாக்களை நீங்கள் எப்பொழுதும் மறுபரிசீலனை செய்ய தவறுகிறீர்கள்.
இந்த முறையை மறுபரிசீலனை செய்து பாருங்கள்.உண்மையில் உங்களுக்கு மீடியா எந்த வகையில் உங்களுடைய மனதை கட்டுப்படுத்துகிறது என்பது இது போன்று நுணுக்கமாக தெளிவாக யோசித்தால் மட்டும் தான் உங்களுக்கு புரியும்.
No comments:
Post a Comment