செவ்வாய், 22 ஜூலை, 2025

GENERAL TALKS - நம்ம சப்கான்ஸியஸ் மனதோடு ஒரு செயல் !




பெரும்பாலான நேரங்களில் நாம் நிர்வாகத்திறமையற்ற மக்களோடு போராட வேண்டியது இருக்கிறது. வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத இவர்கள் கடைசியில் சாதிக்க வேண்டிய மனிதர்களை பெரிய அளவில் பஞ்சாயத்தில் சிக்க வைத்துவிட்டு நகர்கின்றனர். அடிப்படையில் இவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆணவம் இவர்களை யாருக்கும் பயன்படாத குப்பையாக மாற்றுகிறது. நம்முடைய வாழ்க்கையின் தோல்விக்கு நாம் காரணம் அல்ல என்றும் நிர்வாகத்திறனற்ற இவர்களுடைய மனப்பான்மைதான் காரணம் என்று உணரும்போது இன்னொருவர் எங்கோ எப்போதோ செய்த குற்றத்துக்கான தண்டனையை இன்று சம்பந்தமே இல்லாமல் நமக்கு கொடுப்பதை போல இருக்கிறது. நம்பிக்கை வைத்த மக்கள் முதுகில் குத்துகிறார்கள். இதுதான் நாம் கவனமாக யோசிக்க வேண்டிய நேரம். புத்தியை காட்டிவிட்டார்கள். குப்பைகள் என்னைக்குமே குப்பைகள்தான். எல்லா இடங்களிலும் அந்த குப்பைகள் மாற்றங்களை சந்திப்பதால் ஏதோ பயன்படும் பொருட்களாக மாறுகிறார்கள் ஆனால் மாற்றங்களை பார்த்து பயந்து பயந்து வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றையுமே பறிகொடுத்துவிடுவோம் என்று கண்களை கசக்கும் ஆட்களிடம் எல்லாம் எதுவுமே பண்ண முடியாது. இருந்தாலும் இது வெளி உலகத்தில் நடக்கும் பிரச்சனை. எப்போதுமே நம்முடைய சப்கான்ஸியஸ் மனதுக்குள்ளே இருந்து பாசிட்டிவ்-ஆக எந்த பிரச்சனையும் அணுக வேண்டும். நம்முடைய சப்கான்ஸியஸ் மனதுக்கு அதிகப்படியான சக்திகள் இருப்பதை நம்ப வேண்டும். இது இன்னுமே அறிவியல் வகையில் சொல்லப்படாத கருத்து ஆனால் நிறைய பேருக்கு பயன் அளித்துள்ளது. நாம் நிறைய விஷயங்களை முயற்சி செய்து தோற்றுவிட்டோம். இந்த விஷயத்தை முயற்சித்து தோற்பதால் பெரிய மாற்றம் எதுவுமே உருவாகாது !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...