Friday, July 25, 2025

CINEMA TALKS - LAADAM (2009) - TAMIL FILM - திரை விமர்சனம் !



இந்த படத்தைப் போல மிகவும் எளிமையான ஒருவரி கதை அமைப்பு இருந்தும் திரைக்கதையில் தெளிவாக எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் க்ரைம் காமெடி ஃபிலிமை பார்க்க இயலாது.

இந்த காலத்து மக்களுக்காக வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் அனைத்துமே.பொதுவாகவே உடனடியாக ஹீரோவுக்கு மிகப்பெரிய மாஸ்-ஐக் காட்ட வேண்டும் அல்லது மிகப் பெரிய அளவில் ஒரு நெட்வொர்க் எதிர்ப்பது காட்டவேண்டும் என்று சக்திகளுக்கு மிஞ்சிய கற்பனைகளை கொடுக்கும்போது மக்கள் பார்க்கக் கூடிய விஷயங்கள் தான் பார்க்கக்கூடிய ஸ்கேல்ல் மிகவும் அதிகமானதாக மாஸ் இருக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்திருக்கும்போது இந்த படம் ஹீரோவுக்கு கொடுத்த கேரக்ட்டரே வேற லெவல்லில் இருக்கிறது.

இந்த படத்துடைய கதை ஒரு சராசரியான அப்பாவியான ஒரு இளைஞர் தெரியாமல் இரண்டு மோசமான கேங்ஸ்டர்ங்களுக்கு நடுவே நடக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய யுத்தத்தில் தேவையே இல்லாமல் சென்று மாட்டிக்கொண்டு இந்நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து வெளியே வருவதை இந்த படமாக காட்டியுள்ளது.

இந்த படம் ஒரு திரைக்கதையாக பார்க்கும் போது மிகவும் தெளிவாக இஸ் குட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் உண்மையில் பாராட்ட தகுந்த அளவு கடின உழைப்பு இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். 

இந்தப் படம் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் வெற்றி அடைந்தது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால்.கண்டிப்பாக நல்ல விமர்சனங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக தகுந்தது என்று சொல்லலாம். ஒரு சில நேரங்களில் சரியான மியூசிக் மற்றும் "சிறு தொடுதலிலே" போல ஒரு.அருமையான பாடல் காட்சிகள் இந்தப் படத்துக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

No comments:

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10

https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamiz...