Tuesday, July 15, 2025

ARC-G2-011

 


அகங்காரம் ஒரு காட்டில், நான்கு எறும்புகள் நடந்து போய்க் கொண்டு இருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது. அதைப் பார்த்ததும், "டேய்! என்னடா இவன் நம் வழியில் வருகிறான்! கொன்று போடலாம் இவனை!" என்று கொதித்தெழுந்தது, ஓர் எறும்பு. இரண்டாவது எறும்பு, "சீச்சீ, சின்னப் பயலாகத் தெரிகிறான். எனவே, கொல்ல வேண்டாம். அவனை நான்கு கால்களையும் உடைத்துப் போடலாம். அப்போது தான் அவனுக்குப் புத்தி வரும்" என்றது. மூன்றாவது எறும்பு, "அதெல்லாம் எதற்கு? அவனைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, நாம் பாட்டுக்குப் போய் கொண்டே இருக்கலாம், வாருங்கள்" என்றது. நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு, "இது நியாயமே அல்ல. நாம் நாலு பேர் இருக்கிறோம். அவன் ஒரே ஆள். நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல. யுத்தத் தர்மமும் அல்ல! ஆகவே, அவனை மன்னித்து, இப்படி நகர்ந்து வாருங்கள்!" என்றபடி ஒதுங்கிப் போனது. நாம் நினைப்பது தான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்து விட்டால், இந்த எறும்புகளைப் போலத்தான் யானைகளைக் கூடத் துச்சமாக பார்த்து தொலைப்பீர்கள். தனக்கானத் துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம் தான் அடிப்படை. ஆனால், ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்து விடாது. எனவே திறமையில் சறுக்கல்கள் வரும் போது ஆர்வத்துக்குச் சற்றே அணை போட்டு விட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்க கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதை முதன்மைத துறையாக வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கான கௌரவம் இருக்கலாம் ஆனால் எந்த பொருட்களும் சம்பாதிக்காமல் கௌரவம் கொள்வது நடைமுறை சாத்தியமற்ற கர்வம் !

No comments:

ARC-G2-017

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,” என்ற...