வியாழன், 24 ஜூலை, 2025

ARC-G2-064

 



ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் “ஸாரி” கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம். ஒரு “குஷ்டரோகி” பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், “நான் ஒரு குஷ்டரோகி. எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா. இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க. அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது. உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?” என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. “அம்மா. நான் இருக்கிறேன் அம்மா. “ என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான். முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான். நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே. “ என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான். செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், “அம்மா! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான். நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்!” என கதறி அழுகிறான்.


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...