Thursday, July 24, 2025

ARC-G2-055

 அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான். அவன் தண்ணீர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும். தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன. தோட்டக்காரன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது, குரங்குகளும் அவர் செய்வது போலவே செய்தன. ஒருநாள் தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அவருக்கு ஒரு யோசனை வந்தது, குரங்குகளை அழைத்து பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய விஷயத்தைச் சொன்னான்.”நாம் தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல, உங்களால் ஒரு நாளைக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியுமா?" என்று கேட்டார். குரங்குகளும் அதை ஏற்றுக் கொண்டும் மிகவும் சந்தோஷம் அடைந்தது. தோட்டகாரனும் மகிழ்ச்சி அடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றார். எல்லா குரங்குகளும் வேலையை செய்ய ஆரம்பித்தன ஆனால் எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த குரங்குகளின் தலைவன் திட்டம் ஒன்றை கூறியது, ”ஒவ்வொரு செடியாக பிடுங்கி அவற்றின் வேரை பார்க்கலாம். வேர் பெரியதாக இருக்கும் செடிக்கு நிறைய தண்ணீர் ஊற்றலாம், சிறிய வேர் இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றலாம்" என்று யோசனை சொன்னது. குரங்குகள் உடனே ஒவ்வொரு செடியாக பிடுங்கி அவற்றில் வேரின் அளவை பார்த்துக் கொண்டு மீண்டும் அந்த செடியை நட்டு தண்ணீர் ஊற்றின. அதன் விளைவாக பல செடிகள் வாடி இறந்துபோனது. வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரன் அதிர்ச்சியடைந்தான். தனது வேலையைச் செய்வதற்கு குரங்குகளை நம்பியதை நினைத்து தன் தவறை உணர்ந்தார். புத்தியில்லாதவர்களுக்கு முக்கியமான பணிகளை ஒருபோதும் ஒதுக்க கூடாது

No comments:

SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.4 - சரியான விஷயங்களை சரியான ஆட்களிடம் சரியான நேரத்தில் சரியாக கேட்க வேண்டும்.

இந்த விதி எப்படி வேலை செய்கிறது என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை கேட்கிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை எதற்காக கேட்கிறீர்கள் என்பதை ஒரு சிறப்பான ப...