Wednesday, July 16, 2025

MUSIC TALKS - MALARGALEY UNGALAI NAAN KADHALIKKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன ? என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன ? இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன ? என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நானும் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன ? என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு

நதிகளை மட்டும் அல்ல
அதன் நுரையையும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டும் அல்ல
அதன் கரையையும் காதலித்தேன்
ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே
முகில் போவதை போலே
எந்தன் உடல் அங்கு பறந்திட
வழி இல்லையா ?

மழை துளி மழை துளி 
முத்துகளாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை
சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே
மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிறத்திலே
ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி
இதமானது வாழ்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற
கவிஞன் இவன் !

மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன ? என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன ? இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன ? என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நானும் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன ? என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு


No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...