செவ்வாய், 22 ஜூலை, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 014



தம்பதிகள் தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் புகுந்தான் திருடன். அவர்கள் வீட்டில் திருடுவதற்கு வேறெதுவும் இல்லாமல், ஒரே ஒரு பானையில் அரிசி நிரப்பப்பட்டு அவர்கள் படுக்கை அறையில் அது வைக்கப்பட்டிருந்ததால் அதனைத் திருட அங்குப் புகுந்தான் அந்தத் திருடன். பானையிலிருந்த அரிசியைத் திருடி, வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து உண்ண நினைத்தான் திருடன். ஆனால் அரிசியைக் கட்டி எடுத்துச் செல்ல அங்கு வேறெதுவும் இல்லாததால், தன் மேலாடையில் முழு அரிசியைக் கொட்டிக் கட்டி எடுத்துச் செல்ல நினைத்துத், தன் மேலாடையைக் கழற்றித் தரையில் விரித்தான். பின் பானையின் பக்கம் திரும்பி அதனைத் தூக்க முனைந்த போது, விழிந்துக் கொண்ட கணவன் தன்கையை நீட்டி திருடனின் மேலாடையை மெதுவாய் எடுத்துத் தன் படுக்கையின் அடியில் மறைத்து வைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். பானையைத் தூக்கி அதிலிருந்த அரிசியை மேலாடையில் கொட்ட வந்த திருடன் தான் ஆடையை விரித்திருந்த இடத்தில் காணமல் திடுக்கிட்டுத் திகைத்தான். அந்த நேரம் பார்த்து மனைவி விழித்துக் கொண்டாள். கணவனை எழுப்பி ஏதோ ஓர் உருவம் அறையினுள் நடமாடுவதை அவனுக்கு உணர்த்தினாள். கணவன்” நான் நீண்ட நேரமாக விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இங்குத் திருடன் யாரும் இங்கு இல்லை” என்றான். “என்ன? திருடன் கூவினான் “என் மேலாடை இங்கு திருடு போய்விட்டது. திருடன் யாரும் இங்கு இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம்?” என்றான் அந்த உண்மைத் திருடன். இந்த கதையில் இருப்பதை போலத்தான் மோசமான அரசியல் ஆட்கள் பணத்தை கொள்ளை அடித்து ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு பிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய வாரிசுகள் வெளிநாடுகளில் வேலை பார்த்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இவர்களை போல அல்லாது தெளிவாக ஒரு நாடு முன்னேறனால்தான் நாமும் முன்னேற முடியும் என்று புரிந்து நடந்துகொண்டு இருக்கிறார்கள் !
 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...