ஒரு ஊரில் ரொம்ப ஏழையான ஒரு வாத்து மேய்க்கிறவன் இருந்தான். அவன் தினமும் கடவுளிடம், ''என்னிடம் கருணை காட்ட மாட்டாயா?'' என்று வேண்டுவான். ஒருநாள் கடவுள் அவன் முன் தோன்றி, ''அப்பனே! இந்த வாத்து நாளையிலிருந்து தினம் ஒரு பொன்முட்டையிடும்!'' என்று கூறி மறைந்தார். வாத்துக்காரனுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடினான். ஏனென்றால், அந்தக் குள்ளவாத்து அவனுக்குச் சொந்தமானது. கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து முந்தைய நாள்தான் வாங்கியிருந்தான். மறுநாள் காலை அவனுடைய குள்ளவாத்து தகதகன்னு ஜொலிக்கிற ஒரு பொன்முட்டையைப் போட்டது. அதை வெளியூரில் விற்று சவுகரியமாக வாழ்ந்து வந்தான். இப்படியே அவன் நிறையப் பணம் சேர்த்து ஆனந்தமாயிருந்தான். 'மனம் ஒரு குரங்கு'ன்னு சும்மாவா சொன்னாங்க! 'இந்த வாத்து வயித்துலே நிறையப் பொன்முட்டை இருக்கும் போலிருக்கிறது. மொத்தமா போட்டுத் தொலைச்சா என்ன? பெரிய பங்களா, கார்னு வசதியா இருக்கலாமே' என்று முட்டாள் தனமா யோசிச்சான். மறுநாள் காலையிலே வாத்தைப் பிடிச்சு அதன் வயிற்றை அறுத்தான். பாவம் வாத்து! அதோட வயித்துலே அன்னிக்குப் போடவேண்டிய ஒரு முட்டைதான் இருந்தது. பேராசை பெரிய நஷ்டமாப் போச்சு! ஒரு மூட்டை அரிசியையும் ஒரே நாளிலா சாப்பிடறோம்! முட்டாளான வாத்துக்காரனை எல்லாரும் சுலபமா ஏமாத்திட, அவன் பணமெல்லாம் கரைஞ்சது. பழையபடி அவன் வாத்து மேய்க்கத் தொடங்கினான்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Wednesday, July 16, 2025
Subscribe to:
Post Comments (Atom)
ARC-G2-030
ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...

-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment